Published:Updated:

சாரதா நிறுவன மோசடி: ப.சிதம்பரத்தின் மனைவியிடம் சிபிஐ விசாரணை!

Vikatan Correspondent
சாரதா நிறுவன மோசடி: ப.சிதம்பரத்தின் மனைவியிடம் சிபிஐ விசாரணை!
சாரதா நிறுவன மோசடி: ப.சிதம்பரத்தின் மனைவியிடம் சிபிஐ விசாரணை!
சாரதா நிறுவன மோசடி: ப.சிதம்பரத்தின் மனைவியிடம் சிபிஐ விசாரணை!

புதுடெல்லி: சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

மேற்கு வங்காளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாரதா சிட்பண்ட் நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்தின் நிறுவனர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, சுதிப்தா சென் அளித்துள்ள வாக்குமூலத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் கொல்கத்தா வரும்போதெல்லாம் அவருக்கு கட்டணம் வழங்கியதாகவும், அவர் தங்குவதற்கான ஐந்து நட்சத்திர ஓட்டல் செலவையும் நானே ஏற்றுக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், என்னுடைய நிதி நிலைமை குறித்து தெரிந்து கொள்ளாமல், மனோரஞ்சனாஸ் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் முதலீடு செய்யுமாறு நளினி சிதம்பரம் அழுத்தம் கொடுத்தார் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (21ஆம் தேதி) விசாரணை நடத்தினர்.