முறையான கல்லூரிகளில் படித்தாலே வேலை கிடைக்காத இன்றைய சூழலில், லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட மோசடிக் கல்வி நிறுவனங்கள் பல புற்றீசல்போல் கிளம்பியுள்ளன. ''நர்ஸிங், ஆசிரியர் பயிற்சி, லேப் டெக்னிஷியன், கேட்டரிங், ஐ.டி.ஐ.... படித்தவுடன் வேலை!!'' என்று வலைவிரிக்கும் ஃப்ளெக்ஸ் போர்டுகள் கிராமப்புறங்களில் நிறைந்திருக்கின்றன. சிறு நகரங்களின் மூத்திரச் சந்துகளில்கூட, இதுபோன்ற நிறுவனங்களின் ஆள் பிடிக்கும் விளம்பரங்கள் கண்சிமிட்டுகின்றன. அரசின் எந்த அங்கீகாரமும் இல்லாமல் இவை தொடங்கப்பட்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

தங்கள் குழந்தைகளை இன்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளில் சேர்க்கும் வசதி இல்லாத, அதே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கவும் விருப்பம் இல்லாத ஏழைப் பெற்றோர்தான் இவர்களின் இலக்கு. 'உடனே வேலை கிடைக்கும்’ என்ற பொய் வாக்குறுதியை நம்பி, நர்ஸிங், கேட்டரிங் போன்ற படிப்புகளில் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.

கல்வியாளரும், தமிழ்நாடு அறி வியல் இயக்க நிர்வாகியுமான சுப் பிரமணியனிடம் பேசினோம்.

''நர்சரி, பிரைமரி பள்ளி தொடங்க வேண்டும் என்றாலே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நான்கு விதமான சான்றுகளைப் பெற வேண்டும். ஆனால், கிராமங்களில் நர்ஸிங், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட தொழிற்பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்குபவர்கள், எந்த அனுமதியும் பெறுவது இல்லை. ஒரு கட்டடத்தின் மொட்டை மாடியில் ஷெட் போட்டு கல்லூரி தொடங்கிவிடுகின்றனர். இவர்களைப் போன்றவர்களுக்கு அங்கீகாரம் (!) வழங்குவதற்காக கேரளாவைச் சேர்ந்த பி.எஸ்.எஸ். (பாரத் சேவக் சமாஜ்) போன்ற தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்... ஸ்பாட் விசிட்கூடச் செய்யாமல் அங்கீகாரம் கொடுத்து விடுவார்கள். படிப்பறிவே இல்லாத ஒருவரை ஆசிரியராக நியமிக்கலாம். எத்தனை மாணவர்களை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இஷ்டத்துக்கு நன்கொடை வசூலிக்கலாம். வகுப்புகள் நடத்த வேண்டாம். தேர்வுகளையும் நீங்களே நடத்திக்கொள்ளலாம். தேர்வுக் கட்டணத்தை மட்டும் அந்த நிறுவனத்துக்கு அனுப்பினால் சான்றிதழை அனுப்பி விடுவார்கள். இது மத்திய அரசு சான்றிதழ் என்ற வாசகம் அதில் இருக்கும். ஆனால், அதை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்கூட பதிவுசெய்ய முடியாது. பெற்றோர் உஷா ராக இருப்பது நல்லது'' என்றார்.

போலி மருத்துவர் ஒழிப்பு அமைப்பின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், '' பி.எஸ்.எஸ். நிறுவன நடவடிக்கைகளை தடைசெய்யக் கோரி, அரசு அங்கீகாரம் பெற்ற துணை மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எந்தக் கல்லூரிக்கும் கல்வி நிறுவனத்துக்கும் இவ்வாறு அனுமதி வழங்கக் கூடாது என்று அந்தத் தொண்டு நிறுவனத்துக்குத் தடை விதித்தது. 'இனி எந்தக் கல்வி நிறுவனத்தையும் நடத்தமாட்டோம்’ என்று எழுதிக் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்டனர். ஆனால், இப்போது 'கல்வி நிறுவனங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தங்களை அணுகலாம்’ என்று பள்ளிகள், மருத்துவமனைகள், டிரஸ்ட்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது அந்த நிறுவனம். இங்கே பாருங்கள்... எனக்கும் கடிதம் வந்திருக்கிறது'' என்றார்.

சென்னையில் உள்ள பி.எஸ்.எஸ்.நிறுவனத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அதிகாரப் பூர்வமாகப் பேச யாரும் முன்வரவில்லை. பெயர் சொல்லாத ஒருவர், ''தலைமை அலுவலகத்தைத் தவிர வேறு எங்கும் எங்களுக்கு ஊழியர்கள் இல்லாததால்தான் கண்காணிக்க முடியவில்லை'' என்றார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணசாமி,

''மத்திய, மாநில அரசிடம் அனுமதி பெற்றுள்ளதா என்று சரிபார்க்க நேரம் இல்லாதவர்கள், அந்தக் கல்வி நிறுவனம் தொடங் கப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகி இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது'' என்றார்.

பெற்றோர்களும் மாணவர்களும் உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது!

- கே.கே.மகேஷ்

படங்கள்:

சாய் தர்மராஜ், பா.காளிமுத்து