Published:Updated:

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது!

டம்மி தலைவரா டால்மியா?

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது!

டம்மி தலைவரா டால்மியா?

Published:Updated:
##~##

சென்னை, டெல்லி, கொல்கத்தா மூன்றும் சேர்ந்து மும்பையை பவ(£)ர் சென்டர் ஆக்காமல் ஒதுக்கிக் கீழே தள்ளியிருக்கின்றன. சீனிவாசன் போனால் அந்த இடத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிட, சரத் பவார், மும்பை வகையறாக்கள் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்து ஜக்மோகன் டால்மியாவை பி.சி.சி.ஐ. நிர்வாகத்தின் தற்காலிகமாக (இந்தப் பதவிக்கு இன்னும் பெயர் வைக்க​வில்லையாம்) அறிவித்திருக்கிறது சீனிவாசன் தலைமையில் சென்னையில் கூடிய பி.சி.சி.ஐ. கமிட்டி. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறித்த விசாரணை முடியும் வரை, பி.சி.சி.ஐ-ன் தினசரி நிர்வாகத்தை டால்மியா கவனிப்பார். ஆனால், தலைவராக கையெழுத்துப் போட வேண்டிய இடங்களில் சீனிவாசனே கையெழுத்திடுவார் என்றும் அறிவித்துள்ளனர். 

'டை’யான ஆட்டம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக சீனிவாசன் விலக்கப்பட்டாலும், இது அவருக்கு கிடைத்த வெற்றிதான் என்கிறார்கள். கிரிக்கெட் மொழியில் சொன்னால் ஆட்டம் 'டை’யாகிவிட்டது. இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும், சீனிவாசன் பவர் சென்டராக இருப்பது எப்படி என்று பி.சி.சி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ''சீனிவாசன் கறார் பிசினஸ்மேன். தொழிலில் யாரைப் பிடித்தால் காரியம் சாதிக்க முடியும்? யார் யார் எல்லாம் தொழிலுக்கு தேவையில்லாதவர்கள் என்று தெளிவாகத் தெரிந்தவர். அவர்

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது!

பி.சி.சி.ஐ. பொருளாளராக வந்ததுமே முக்கியமான கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் அனைவரையும் தன்னுடைய வட்டத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதையே நோக்க​மாகக்கொண்டு செயல்பட்டார். பணப் புழக்கத்தை பி.சி.சி.ஐ. நிர்வாகிகளுக்குள் அதிகரித்து தன்னுடைய நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக்கொண்டார். அவரால் கிரிக்கெட் சங்கத்துக்குள் வளர்ந்து அவருக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் அதிகம். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஃப்ரூக் அப்துல்லா தொடங்கி, பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவருமான அருண் ஜெட்லி வரை பலரும் சீனிவாசனுக்கு விசுவாசிகள்.

காரணம், இவர்கள் சர்ச்சையில் சிக்கியபோதெல்லாம் சீனிவாசன்தான் ஆபத்பாந்தவனாக அவர்களைக் காப்பாற்​றியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்துக்குள் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளை வாய் மூடி வேடிக்கை பார்த்ததுபோலவே, கீர்த்தி ஆஸாத் தொடங்கி பலரும் அருண் ஜெட்லிக்கு எதிராகக் கொடி பிடித்தபோதும் இதே ஃபார்முலாவை பின்பற்றினார் சீனிவாசன்.

கபில்தேவ், சுனில் கவாஸ்கர் தொடங்கி பல முன்னாள் கிரிகெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் வீரர்களுக்கான ஓய்வூதியம் என்ற பெயரில் சீனிவாசன் கொடுத்திருக்கிறார். அதனால், அவர்களும் சீனிவாசனுக்கு எதிராகப் பேசத் தயங்குகிறார்கள். சீனிவாசன் அதிகாரத்தால் மட்டும் அல்ல, பணத்தாலும் விளையாடுபவர். எத்தகைய தாக்குதல்கள் வந்தாலும் அதை சமாளிப்பார்'' என்கிறார்கள்.

செக் வைக்குமா செப்டம்பர்?

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​களின் நிர்வாகம் தொடர்பான விசாரணை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனிவாசனின் பி.சி.சி.ஐ.

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது!

தலைவர் பதவிக்காலம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், இதற்கு முன்பு வரை இரண்டு ஆண்டுகள்தான் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் ஒருவர் இருக்க முடியும் என்ற விதிமுறையில் கடந்த ஆண்டுதான் மாற்றம் கொண்டுவந்தார் சீனிவாசன். இதன்படி, பி.சி.சி.ஐ. நிர்வாகிகளின் ஆதரவுடன் மேலும் ஓர் ஆண்டு தலைவர் பதவியில் தொடர முடியும் என்று மாற்றம் செய்யப்பட்டது. அதனால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலுக்கு முன்கூட்டியே யார் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை சீனிவாசன் தெரிந்துகொண்டார். தனக்கு எதிராக இருப்பவர்களைத் தன் பக்கம் கொண்டுவர சீனிவாசன் காய் நகர்த்துவார்.

''சீனிவாசனைத் தூக்கி தூரப்போட்டுவிட்டு  கிரிக்கெட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவரலாம் எனக் கனவு கண்டிருந்த சரத் பவார், அம்பானி, சுப்ரதோ ராய் உள்ளிட்டவர்களுக்கு இது பின்னடைவுதான் என்றாலும் அவர்கள் இதற்கு மேல் இந்த விவகாரத்தைக் கிளற மாட்டார்கள். பி.சி.சி.ஐ. நிர்வாகத்தைப் பகைத்துக்கொண்டால், ஸ்பான்ஸர்ஷிப் கிடைக்காது. இது தங்களுடைய கம்பெனிகளுக்குப் பாதகமாக அமையும் என்பதால் பெரிய நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் இனி தலையிடாது'' என்கிறார் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர்.

'என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நான் எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று, நிர்வாகிகளிடம் எகிறினாராம் சீனிவாசன். ஆனால் எதிர்த் தரப்போ, ''ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடுவர்களை நியமிப்பதில் தலையிட்டீர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படும் வகையில் ஐ.பி.எல். கால அட்டவணையை மாற்றினீர்கள். ஐ.பி.எல். மூன்றாவது சீசனுக்குப் பிறகு ஐ.பி.எல். ஏல முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் லாபமடையும் வகையில் மாற்றங்கள் செய்தீர்கள்'' என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்களாம்.

மீட்டிங் மினிட்ஸ்!

சீனிவாசன் ராஜினாமா செய்வார் என்ற பரபரப்புடன் ஜூன் 2-ம் தேதி சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் பி.சி.சி.ஐ. அவசரக் கூட்டம் நடந்தது. 2.30 மணிக்கு நடக்கும் கூட்டத்துக்கு காலை 10.30 மணிக்கே வந்துவிட்டார் சீனிவாசன். முதலில் சீனிவாசன், ஜக்மோகன் டால்மியாவுடன் தனியாகப் பேச்சு​வார்த்தை நடத்தினார். அதன் பிறகு, பி.சி.சி.ஐ-யின் மற்ற நிர்வாகிகளுடன் பேசிய சீனிவாசன், 'எக்காரணம் கொண்டும் நான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன்.

என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது!

என்னைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது. அதற்கு 24 பேர் எனக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். எனக்கு எதிராக அவ்வளவு பேர் வாக்களிக்கத் தயாராக இல்லை. ஆனாலும், விசாரணை முடியும் வரை நான் தலைவராக செயல்பட மாட்டேன். அந்த நேரத்தில் இடைப்பட்டத் தலைவராக ஜக்மோகன் டால்மியா இருப்பார்’ என கூட்டம் தொடங்குவதற்கு முன்பே சொல்லிவிட்டாராம். நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாகவே இருந்தார்களாம்.

டெல்லி பவர் சென்டர்களான அருண் ஜெட்லியும், ராஜீவ் சுக்லாவும் சென்னைக்கு வரவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவரான அனில் கும்ப்ளே, லண்டனில் இருந்து வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் பங்கேற்றார்.

கூட்டம் தொடங்கியதும் முதலில் 15 நிமிடங்கள், தான் எழுதிவந்த உரையைப் படித்தார் சீனிவாசன். ''கடந்த இரண்டு வாரங்களாக இந்தியப் பிரதமரைவிட நான்தான் அதிகம் செய்திகளில் அடிபடுகிறேன். இது மீடியாக்கள் என் மீது ஒருதலைப்பட்சமாக நடத்தும் வழக்கு. என்னை சட்டப்படி நீக்க, பி.சி.சி.ஐ-க்கே அதிகாரம் கிடையாது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை'' என்றார் சீனிவாசன். கூட்டத்தில் இடைக்காலத் தலைவராக டால்மியாவின் பெயரை அருண் ஜெட்லி பரிந்துரைக்க, அதை சீனிவாசன் ஏற்றுக்கொள்ள கூட்டம் முடிந்தது.

பி.சி.சி.ஐ. நிர்வாகத்தின் அவசரக் கூட்டங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், பிளேயர்களின் ஸ்பாட் ஃபிக்ஸிங் ஊழலும் முழுமையாக வெளியே வரப்போவது இல்லை. நிர்வாகிகளின் ஊழல் முறைகேடுகளும் வெளியே வராது. அனைத்தும் சிமென்ட் பூசி மொழுகப்படும் என்பதுதான்!

- சார்லஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism