Published:Updated:

கொதிப்பில் விஜய் ரசிகர்கள்

நிகழ்ச்சியைத் தடுத்த அதிகாரக் கரம்!

கொதிப்பில் விஜய் ரசிகர்கள்

நிகழ்ச்சியைத் தடுத்த அதிகாரக் கரம்!

Published:Updated:
##~##

விஜய் பிறந்த நாள் விழாவுக்குத் திடீரென ஏற்பட்டிருக்கும் சிக்கலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 

ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய் பிறந்த நாள். தங்கள் தலைவரின் பிறந்த நாளை அன்றைய தினம் தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் விஜய் ரசிகர்கள் சென்னையில் ஒன்றுகூடி பிறந்த நாள் விழாவை முன்கூட்டியே, அதாவது ஜூன் 8-ம் தேதியே பிரமாண்டமாக நடத்த முடிவுசெய்தனர். மீனம்பாக்கம் அருகில் இருக்கும் ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடத்தத் திட்டமிட்டனர். விஜய் வருகிறார் என்றதும், ஜெயின் கல்லூரி நிர்வாகம் சந்தோஷத்துடன் அனுமதி கொடுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 6-ம் தேதி... ஜெயின் கல்லூரி மைதானத்தில் விழாவுக்காக மேடை அமைக்கும் பணியில் உற்சாகமாக ரசிகர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென அப்போது, 'விஜய் பிறந்த நாள் விழாவை இங்கே நடத்தக் கூடாது’ என்று இறுகிய முகத்தோடு அனுமதி மறுத்து விட்டார்களாம்.

கொதிப்பில் விஜய் ரசிகர்கள்
கொதிப்பில் விஜய் ரசிகர்கள்

என்னதான் நடந்தது?

விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் எல்லோரும் விஜய் பிறந்த நாளை சென்னையில் ஒன்றுகூடி கொண்டாட முடிவுசெய்​தோம். ஜூன் 22-ம் தேதி விழா நடத்தினால் பள்ளிகள் திறந்துவிடும்; குடும்பத்தி​னருடன் வர முடியாது என்ப​தால், முன்கூட்டியே ஜூன் 8-ம் தேதி விழாவை நடத்தத் திட்ட​மிட்டோம்.

விழாவில், உயர் நீதிமன்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதிமணி கலந்துகொண்டு 3,900 பேருக்கு மரக் கன்றுகள் வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். விஜய் கையால் 3,900 ஏழைகளுக்கு கம்ப்யூட்டர், பெண்களுக்குத் தையல் மிஷின், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க திட்டமிட்டு இருந்தோம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலர் அங்கே வந்து 'இங்கே விஜய் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது. இடத்தைக் காலிசெய்யுங்கள்’ என்று மிரட்டினர். 10 நாட்களுக்கு முன்பே அனுமதி மறுப்பைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அழைப்பிதழ் அடித்து, சுவரொட்டி ஒட்டி, பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னைக்குப் புறப்படத் தயாராகும் தருணத்தில், வேண்டும் என்றே விழாவுக்கு முதல்நாள் அனுமதியை மறுத்து எங்களை வேதனைப்பட வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஏதோ ஒரு அதிகாரக் கரம்தான் தடுத்து நிறுத்தி இருக்கிறது’ என்று ஆவேசப்பட்டனர்.

இப்படித் தேவையில்லாமல் சீண்டியே விஜயை அரசியலுக்கு இழுத்து வந்துவிடுவார்களோ?

- எம்.குணா, படம்: பா.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism