Published:Updated:

பாலியல் பலாத்காரம் குறித்த தனது கருத்துக்கு ஆர்.ஆர்.பாட்டீல் மன்னிப்பு கேட்டார்!

மும்பை: பாலியல் பலாத்காரம் குறித்து கருத்து தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.ஆர்.பாட்டீல் சர்ச்சையில் சிக்கினார். தற்போது, தனது கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் போலீஸ் அமைச்சருமான ஆர்.ஆர்.பாட்டீல், சாங்கிலியில் நடத்த தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, ''என்னை மராட்டிய நவநிர்மாண் சேனா தொண்டர்கள் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஷயம் என்னவென்று கேட்டேன். அவர்களது கட்சி வேட்பாளர் பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் இருப்பதால் எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்கள்.

தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றாலும், எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றாலும் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் போல" என்று பேசினார். அவரது இந்த கருத்து பாலியல் பலாத்காரத்தை தூண்டுவதாக கூறி பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, தனது பேச்சு யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால், பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். மேலும், தான் போலீஸ் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.