Published:Updated:

கோவையில் அக்கா-தம்பியை கொன்றவரை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் தடை!

கோவையில் அக்கா-தம்பியை கொன்றவரை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் தடை!
கோவையில் அக்கா-தம்பியை கொன்றவரை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் தடை!
கோவையில் அக்கா-தம்பியை கொன்றவரை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி: கோவையில் அக்கா- தம்பியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை தூக்கில் போட உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவையில் கடந்த 2010ஆம் ஆண்டு சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக கார் ஓட்டுநர் மோகன்ராஜ், அவரது நண்பர் மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் சிறுமி முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் காவல்துறையினரிடம் சிக்கிய மோகன்ராஜ் தப்பியோட முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டான்.

இந்நிலையில், மோகன்ராஜ் நண்பர் மனோகரனுக்கு கோவை மகிளா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மனோகரனை தூக்கில் போட இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.