Published:Updated:

பிளிப்கார்ட் குறித்து விசாரணையா?: அமலாக்கத் துறை மறுப்பு!

விகடன் விமர்சனக்குழு
 பிளிப்கார்ட் குறித்து விசாரணையா?:   அமலாக்கத் துறை மறுப்பு!
பிளிப்கார்ட் குறித்து விசாரணையா?: அமலாக்கத் துறை மறுப்பு!
 பிளிப்கார்ட் குறித்து விசாரணையா?:   அமலாக்கத் துறை மறுப்பு!

புது டெல்லி: பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்  நிறுவனத்திடம்,அதன் வணிக நடவடிக்கைகள் குறித்து விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அமலாக்கத் துறை கூறி உள்ளது.

 கடந்த 6 ஆம் தேதி இந்திய அளவில் அதிக சலுகைகளை அறிவித்து ஆன்லைன் மூலம் பல்வேறு பொருட்களை  ரூ.600 கோடி அளவிற்கு விற்பனை செய்ததாக செய்திகள் வெளியாயின.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகார்கள் அளித்தன. இது போன்ற நிறுவனங்கள் மூலம்   பல லட்சம் வணிகர்கள் மற்றும் வணிகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே மத்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  அந்த புகார்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன்  இதுகுறித்து கூறுகையில், "நிறைய புகார்கள் வருகின்றன.இது தொடபாக   ஆன் லைன் நிறுவனங்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு வர்த்தகம் குறித்து மத்திய  அரசின் கொள்கையை தெளிவுபடுத்த தேவை உள்ளதா என்பது பற்றி விரைவில் ஆலோசிக்கப்படும்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்திடம் விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று மத்திய அமலாக்கத்துறை கூறி உள்ளது