Published:Updated:

ஏமாற்றிய மாஜிஸ்திரேட்... போராடும் பெண் எஸ்.ஐ.

மனதளவில் திருமணம் நடந்துவிட்டது!

ஏமாற்றிய மாஜிஸ்திரேட்... போராடும் பெண் எஸ்.ஐ.

மனதளவில் திருமணம் நடந்துவிட்டது!

Published:Updated:
##~##

பாலியல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்குத் தீர்ப்பளிக்க வேண்டிய விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் தங்கராஜ். அவரே பாலியல் வழக்கில் சிக்கி, திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நின்றிருந்தார்.

 மாஜிஸ்திரேட் மீது புகார் கொடுத்திருக்கும் உமா மகேஸ்வரி திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றுகிறார். அவரிடம் பேசினோம். ''குன்னூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டா இருக்கிற தங்கராஜை, அவர் பெருந்துறையில் வக்கீலா இருந்தபோதே தெரியும். கடந்த ஒரு வருஷமா ரெண்டு பேரும் உயிருக்கு உயிராக் காதலிச்சோம். நான் கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யா இருந்தப்போ, என்னைப் பார்க்க வருவார். எங்க காதலை வீட்டில சொன்னப்போ, அவங்க ஏத்துக்கலை. 'நாம ஏன் அனாதையா கல்யாணம் பண்​ணணும்? ரெண்டு மாசத்துல நான் மாஜிஸ்திரேட் ஆயிடுவேன். முதல்ல என் தங்கைக்குக் கல்யாணம் பண்ணிட்டு, அப்புறம் நாம பண்ணிக்கலாம். நமக்கு மனதளவில் திருமணம் நடந்துவிட்டது. கணவன் மனைவியாகவே வாழலாம்’னு சொன்னார். நானும் அவரது ஆசைக்கு சம்மதிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏமாற்றிய மாஜிஸ்திரேட்... போராடும் பெண் எஸ்.ஐ.

2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாஜிஸ்​திரேட்டாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, குன்னூர் விரைவு நீதிமன்ற நடுவராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி வரை என்னுடன் தங்கி இருந்தார். ஆனால் அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுத்தார். 'நான் ஒரு சாதாரண வக்கீலா ரெண்டாயிரம் சம்பளத்தில் வேலை செய்யறப்போ, உன்னைக் காதலிச்சேன். இப்போ எனக்கு சம்பளம் 50 ஆயிரம். இதர வருமானம்லாம் சேர்த்து ஒரு லட்சம் வருது. இப்போ உன்னைக் கல்யாணம் பண்ண முடியாது. எங்க அப்பா, அம்மா எனக்கு வேற நல்ல பெண்ணா பார்த்து வெச்சிருக்காங்க. அவங்களை நான் கல்யாணம் பண்ணா, எனக்கு 100 பவுன் நகையும் 50 லட்சம் பணமும் தருவாங்க’னு சொன்னார்.

இதையெல்லாம் வெளியில் சொன்னா, ஆள்வெச்சு கொன்னுடுவேன்னு மிரட்டினாரு. அவரது நண்பர் வக்கீல் பிரகாஷ் என்பவரும், 'லஞ்சம் வாங்குறதாப் புகார் கொடுத்து, உன்னை வேலையை​விட்டுத் தூக்கிட்டு, வண்டி ஏற்றிக் கொன்னு​டு​வேன்’னு என்னை மிரட்டினார். அதனால்​தான் புகார் கொடுத்தேன்'' என்றார் ஆவே சத்தோடு.

ஏமாற்றிய மாஜிஸ்திரேட்... போராடும் பெண் எஸ்.ஐ.

தங்கராஜ் மீது வழக்குப் பதிவு​செய்து, கைது செய்தனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தங்கராஜ், கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாஜிஸ்திரேட் தங்கராஜ் சார்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் புருஷோத்​தமன், ''தங்கராஜ் வழக்கறிஞராக இருந்தபோதே அந்தப் பெண்ணைக் காதலித்தார். அப்போது பெண் கேட்டுச் சென்றபோது அந்தப் பெண்ணின் பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதைஅடுத்து இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு, அந்தப் பெண் வேறொரு போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்து, அது பெரிய பிரச்னையாகி, அது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடக்கிறது.

தங்கராஜ் மாஜிஸ்திரேட்டாக பதவிஉயர்வு பெற்றதும், அந்தப் பெண் திருமணத்துக்கு வற் புறுத்தினார். தங்கராஜ் மறுத்ததால், அவரை ஆபாசமாகத் திட்டி அவமானப்படுத்தியுள்ளார். அப்போதே நாங்கள் தங்கராஜை எச்சரித்தோம். இது எதையும் விசாரிக்காமல், அந்தப் பெண் கொடுத்த புகாரில் தவறான பிரிவின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. மேஜராகிவிட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பிறகு மறுத்துவிட்டால்... ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல் போன்ற குற்றத்துக்கான 420 பிரிவில்தான் வழக்குப் பதிய முடியும். இது காவல் துறையினருக்கு நன்கு தெரியும். அவர்கள் வேண்டும் என்றேதான் தங்கராஜ் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார் ஆவேசமாக.

ஆனால், ஆரம்பம் முதலே மாஜிஸ்திரேட் தங்கராஜ் மீது போலீஸாரின் கரிசனம் நிரம்பி வழிந்தது. தொடக்கத்தில் எஸ்.ஐ. உமா மகேஸ்வரி புகார் அளித்தபோதே புகார் மனுவை வாபஸ் பெற, போலீஸ் தரப்பில் நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. உயர் அதிகாரி​கள் உத்தரவுக்குப் பிறகு, ஒரு வாரம் கழித்தே எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. மேலிட நிர்ப்பந்தத்தால் கைதுசெய்த பின்னரும், செய்தி மற்றும் புகைப்படம் வெளியாவதைத் தடுக்க போலீஸார் முயற்சித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாஜிஸ்திரேட் தங்க​ராஜுக்கு ஜாமின் கோரி திருப்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மாஜிஸ்திரேட் தங்கராஜுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி நாற்காலி... கறை படியாத மனிதர்களால் அலங்கரிக்கப்பட வேண்டும்!

- ச.ஜெ.ரவி, ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism