Published:Updated:

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

Published:Updated:
##~##

கவுன்சிலிங் நடக்கும் அண்ணா பல்கலைக்​கழக வளாகத்துக்குள் கல் லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் இருக்கக் கூடாது என்று கடந்த ஆண்டு கண்டிப்பாகச் சொல்லப்பட்டது. காவல் துறை உதவியுடன் பல்கலைக்​கழக வளாகத்துக்குள் கல்லூரியின் ஏஜென்ட்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், இப்போது கல்லூரி ஏஜென்ட்கள், சென்னையில் கோயம்பேடு, பெருங்களத்தூர், எழும்பூர், சென்ட்ரல் ஆகிய நான்கு இடங்களை மையம்கொண்டுள்ளனர். கவுன்சிலிங் நடக்கும் நாட்களில் இந்த நான்கு இடங்களிலும் ஏஜென்ட்களின் கூட்டம் முண்டியடிக்கிறது. வெளியூரில் இருந்து கவுன்சிலிங்குக்காக சென்னைக்கு வந்து பெற்றோ​ருடன் மாணவர்கள் இறங்கும் போதே இந்த ஏஜென்ட்கள் அவர்களை மொய்க்க ஆரம்பித்து விடுகின்றனர். தங்களது கல்லூரி பற்றிய

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவரங்களை அவர்களிடம் எடுத்துச் சொல்வதோடு, 'பக்கத்துலயே ஹோட்டல் ரூம் இருக்குங்க. நீங்க தங்கிட்டு கவுன்சிலிங் கிளம்பலாம். நம்ம கார் உங்களை ஹோட் டலுக்கே வந்து பிக் அப் பண்ணிக்கும்...’ என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிடுவார்கள். ஹோட்​டலில் ஏ.சி. ரூம், அங்கிருந்து கவுன்சிலிங் நடக்கும் அண்ணா பல்கலைக்​கழகத்துக்கு சென்றுவர ஏ.சி. கார் என்று சகல வசதி​களையும் செய்துகொடுப்​பார்கள். ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது, ஒரு துண்டு சீட்டைக் கொடுத்து, 'இதுதான் கவுன்சிலிங்ல நம்ம காலேஜ் கோட் நெம்பர். மறக்காம செலெக்ட் பண்ணிடுங்க...’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அனுப்புவார்கள். வெளியூர்களில் இருந்து வரும் ஏராளமான பெற்றோர்களும், மாணவர்களும் இந்த ஏஜென்ட் களை நம்பி ஏமாந்து​விடுகிறார்கள். இதன்மூலமாக யாரும் சீந்தாத தங்கள் கல்​லூரிக்கான ஆட்களைப் பிடித்துவிடுகிறார்கள். அந்தக் கல்லூரியில் போய்ச் சேர்ந்த பிறகுதான் தெரியும், அங்கே எந்த வசதியும் இல்லை என்பது. எச் சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

சென்னைக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கல்லூரி அது. அத்தனை டி.வி.சேனல்களிலும் இந்தக் கல்லூரியின் விளம்பரம் வரும். செய்தித்​தாள்களில் பக்கம் பக்கமாக கல்லூரியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, விளம்பரங்கள் கொடுத்​திருப்பார்கள். ப்ளஸ் டூ முடித்த கையோடு தங்கள் பிள்ளை​களை அழைத்துக்கொண்டு, இந்தக் கல்லூரியைப் பார்க்க, பெற்றோர் செல்வார்கள். கல்லூரிக்குள் நுழைந்ததும், வாசலில் சிரித்த முகத்துடன் காத்திருக்கும் நான்கு பேர், நேராக ஏ.சி. அறைக்குள் அழைத்துச் செல்வார்கள். அங்கே உங்களுக்கு காபி, ஜூஸ் என விதவிதமாகக் கொடுத்து உபசரிப்பார்கள். பிறகு, கல்லூரி முழுக்க சுற்றிக் காட்டுவார்கள். கல்லூரியின் பிரமாண்டக் கட்டடங்களையும், அவர்களின் உபசரிப்பையும் பார்த்து சிலாகித்து நிற்கும்போதே, 'சாப்பிடப் போகலாம் சார்...’ என்ற அடுத்த அழைப்பு வரும். எவ்வளவு மறுத்தாலும், 'இங்கே வந்தால் நாங்க யாரையும் சாப்பிடாம அனுப்ப மாட்டோம். நீங்க காலேஜ்ல உங்க பையனைச் சேருங்க... சேர்க்காமப் போங்க. ஆனா சாப்பிட்டுத்தான் போகணும்’ என்று வார்த்தைகளில் தேனைக் கலந்து பேசுவார்கள்.

ஹாஸ்டல் மெஸ்ஸில் உள்ள கெஸ்ட் ரூமில் உட்காரவைத்துப் பறிமாறுவார்கள். சிக்கன், மட்டன், மீன் என்று அசைவத்தில் உள்ள அத்தனை வகைகளும் இலையில் இருக்கும். இதற்கு மேல் எந்தப் பெற்றோர் அந்தக் கல்லூரியை வேண்டாம் என உதறிவிட்டுக் கிளம்புவார்கள்? அட்மிஷன் போடும் வரைதான் இந்த அமர்க்களம். அதன்பிறகு, ஹாஸ்டலில் மாணவர்களுக்குப் போடும் சாப்பாடு பற்றி வெளியில் சொல்லவே முடியாது. அந்த லட்சணத்தில் இருக்கும். இங்கே வருடத்துக்கு 70 ஆயிரம் வரை மெஸ் பீஸாக வாங்குகிறார்கள்.

மத்திய மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரியில் நடக்கும் அட்மிஷன் தில்லுமுல்லுகள் அதிகம். அட்மிஷனுக்​காக இங்கே போகும் மாணவர்​களை நேராக கல்லூரி நூலகத்​துக்கு அனுப்புவார்கள். வரிசையாக புத்தகங்கள் அடுக்கிவைக்கப்​பட்டிருக்கும் ரேக்​களுக்கு இடையில் கல்லூரியைச் சேர்ந்த ஒருவர், உட்கார்ந்திருப்பார். இந்தக் கல்லூரியில் குறைந்தபட்ச டொனேஷன் 8 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் 20 லட்சம் வரை வாங்குகிறார்கள். 'மார்க் சொல்லுங்க. என்ன கோர்ஸ் வேணும்?’ இந்த

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

இரண்டு கேள்விகளை முதலில் கேட்பார் அங்கே உட்கார்ந்திருக்கும் நபர். இரண்டையும் சொன்னதும், 'பத்து ஆகும்’ மெல்லிய குரலில் பதில் வரும். பேரம் பேசினால், ஒன்றோ இரண்டோ குறையலாம். பேரம் முடிவுக்கு வந்ததும், அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் இருந்து ஒன்றை உருவுவார். அந்தப் புத்தகத்தில் ஒரு பக்கத்தில் வட்டமிடுவார். எட்டு லட்சம் என்றால் எட்டாம் பக்கம் வட்டமிடப்பட்டு இருக்கும். அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, நூலகத்துக்குப் பின்பக்கம் இருக்கும் வாசல் வழியாக வெளியே அனுப்புவார். அங்கே கட்டட வேலைகள் நடக்கும். அதற்குப் பக்கத்திலேயே ஒரு குடிசை போடப்பட்டு இருக்கும். அந்த வழியில் நிற்கும் நபர்கள் அந்தக் குடிசைக்குள் அனுப்புவார்கள். உள்ளே போனதும், புத்தகத்தை வாங்கிப்பார்த்து 'எட்டு லட்சம் கொடுங்க...’ என்று கேட்பார்கள். பணத்தைக் கொடுத்ததும், எட்டாம் பக்கத்தில் இன்னொரு கிறுக்கல் போடுவார் பணம் வாங்கிய நபர். 'இந்தப் புத்தகத்தை கேஷியர்கிட்ட கொடுத்துட்டு, ஃபீஸ் கட்டிட்டுப் போங்க...’ என்று சொல்லி அனுப்புவார். புத்தகத்தைக் கொடுத்தால், அட்மிஷன் போடப்படும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கான்வகேஷன் ஃபங்ஷன் வரைக்குமான ஃபீஸ் மொத்தமும், அட்மிஷன் அன்றே பறித்துக்கொள்வது இந்தக் கல்லூரியின் ஸ்டைல்.  

பொறியியல் கல்லூரிகளுக்கு ஆள்பிடிக்கும் வேலை​யில் முக்கியப் பங்கு, லோக்கல் சேனல்களுக்கு உண்டு. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து, பொறியியல் கல்லூரி நிர்வாகிகளும், கல்லூரி முதல்வரும் தினமும் லோக்கல் சேனல்களில் ரியல் எஸ்டேட்காரர் போல, வியாபாரம் செய்கிறார்கள். 100 சதவிகி   தம் பிளேஸ்மென்ட் என்று பெருமை பேசுவார்கள்.

அதுவும் சேலத்தில் இருக்கும் ஒரு கல்லூரிக்கு, 'தமிழ்​நாட்டுலயே சூப்பரான காலேஜ்னா இதுதான். பஸ் வசதி இருக்கு. வீட்டுச் சாப்பாடு போல கேன்டீன் சாப்பாடு. காற்றோட்டமான இடத்தில் கலக்கலான காலேஜ். இங்கே படிச்சா, வேலையோட வெளியில போகலாம். படிச்சு முடிச்சதும் லட்சம் லட்சமா சம்பாதிக்கணும்னா இங்கே வாங்க...’ என்று கீச்சுக்குரலில் மைக்கைப் பிடித்து ரோட்டில் நடந்துகொண்டே பேசுகிறார் சீரியல் நாயகி ஒருவர். இன்னொரு கல்லூரி ஒரு மணி நேரம் லைவ் புரோகிராம். அந்தப் புரோகிராமுக்கு போன்செய்து பேசும் மாணவர்களிடம், இலவசங்களைச் சொல்லி மூளைச்சலவை நடக்கிறது. அந்த நிகழ்ச்சிக்குப் போன் செய்த அத்தனை பேரின் நம்பருக்கும் மீண்டும், கல்லூரி தரப்பில் இருந்து போன் போகும். தேவைப்பட்டால் முகவரியை வாங்கி, நேரில் சென்றே பேசுவார்கள். கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து பேசிமுடித்து, அங்கே அட்மிஷன் போட்ட கதைகள்கூட சேலத்தில் நடந்திருக்கிறது.

ஓரளவு விவரம் தெரிந்தவர்கள் கவுன்சிலிங்குக்காக சென்னை வருகிறார்கள். ஆனால், இதுவரை சென்னைக்கே வராத கிராமத்து ஏழை மாணவர்களை குறிவைத்தும் ஏஜென்ட்கள் இயங்குகிறார்கள். கிராமப்புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகள் இவர்களின் டார் கெட். அந்தப் பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பெடுக்கும் ஆசிரியர்களைத் தேடிப் பிடிக்கிறார்கள். அவர்களின் டீலுக்கும் சம்மதிக்கும் ஆசிரியர்கள் மூலமாக காய்நகர்த்துகிறார்கள். பணத்துக்கு ஆசைப்படும் சில ஆசிரியர்களும், 'சென்னைக்கு கவுன்சிலிங் போனால் தெரியாத காலேஜ் கொடுத்து ஏமாத்திடுவாங்க. எனக்குத் தெரிஞ்ச காலேஜ் இருக்கு. உங்க அப்பாவைக் கூட்டிட்டு வா.. நான் பேசி சேர்த்துவிடுறேன்’ என்று வலையை விரிப்பார்கள். கிராமத்துப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அவர் சொல்லும் கல்லூரியில் சேருவார். ஒரு மாணவனுக்கு 20 ஆயிரம் என்று ஏஜென்ட்கள் வழியாக ஆசிரியருக்கு கமிஷன் கல்லா கட்டும்.

இன்று பெரும்பாலான கல்லூரிகள் 100 சதவிகித பிளேஸ்மென்ட் என்பதைத்தான் தங்களது பெருமையாக காட்டிக் கொள்கிறது. 100 சதவிகித பிளேஸ்மென்ட் என்பது சாத்தியமா?

கரன்சி கல்லூரிகளின் தில்லுமுல்லு 2

கேரளாவில் பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் கவுன்சிலிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்குப் பிடித்த கல்லூரியை யாருடைய தலையீடும் இல்லாமல் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல, தமிழ் நாட்டிலும் ஆன்லைன் கவுன்சிலிங் முறையைக் கொண்டுவந்தால், மாணவர்​களுக்கு செலவு, நேரம் எல்லாமே மிச்சமாகும். புரோக்கர்களின் வலையில் சிக்குவதையும் தவிர்க்கலாம். அதேபோல, மற்ற மாநிலங்களில் அரசு கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் மிகக்குறைவு. மேனேஜ்மென்ட் கோட்டாவுக்குக் கட்டணம் அதிகம். ஆனால், தமிழ்நாட்டில் இரண்டுக்கும் ஒரேமாதிரி கட்டணம் இருக்​கிறது. மற்ற மாநிலங்களைப்போல​ இங்கும், அரசு கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்தால், அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்பது கல்வியாளர்கள் பலருடைய கருத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism