Published:Updated:

விபசார வழக்கில் முன்னணி நடிகை கைது!

Vikatan Correspondent
விபசார வழக்கில் முன்னணி நடிகை கைது!
விபசார வழக்கில் முன்னணி நடிகை கைது!
விபசார வழக்கில் முன்னணி நடிகை கைது!

புனே: விபசார வழக்கில் முன்னணி தெலுங்குத் திரைப்பட கதாநாயகி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக தெலுங்கு பட நடிகைகள் சிலர் விபசார வழக்கில்  கைதாகி வருகிறார்கள். சில வாரங்களுக்கு  முன்பு  நடிகை சுவேதா பாசு பிடிபட்டார். நட்சத்திர ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது காவல்துறையினர்  கைது செய்தது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

பின்னர் சுவேதா   படவாய்ப்புகள் இன்றி பண கஷ்டம் ஏற்பட்டதால் விபசாரத்தில் ஈடுபட்டதாகவும், தன்னை யாரும் ஈடுபடுத்த வில்லை  என்றும் பேட்டி கொடுத்திருந்தார்.

தொடர்ந்து பெங்களூரு,சென்னை,ஹைதராபாத் ஆகிய இடங்களில் டி.வி. நடிகைகள், சினிமா துணை நடிகைகள் என இளம்பெண்கள் விபசார வழக்கில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில் இன்னொரு முன்னணி திரைப்பட கதாநாயகியும் காவல்துறையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில்,  ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக தகவல் வந்ததையடுத்து காவல்துறையினர்  விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில், இளம்பெண்கள் பலர் தங்கி இருந்ததை கண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இளம்பெண்கள் அனைவரும்  விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிந்ததையடுத்து கைது செய்தனர்.

மேற்கொண்டு செய்யப்பட்ட விசாரணையில்,கைதான இளம்பெண்களில் ஒருவர் தெலுங்கு படத்தில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் என்பதை அறிந்த காவல்துறையினர், அந்த யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. அந்த நடிகையின் முகத்தை துணியால் மூடி போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து சென்றார்கள்.