Election bannerElection banner
Published:Updated:

சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. தற்கொலை முயற்சி

சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. தற்கொலை முயற்சி
சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. தற்கொலை முயற்சி

சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. தற்கொலை முயற்சி

சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. தற்கொலை முயற்சி

கொல்கத்தா: பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கியுள்ள  சாரதா நிதி நிறுவன முறைகேட்டில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ள  திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி குணால் கோஷ். சிறைக்குள் தற்கொலை முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண மோசடி தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிருந்து நீக்கப்பட்டுள்ள அவர், கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 58 தூக்க மாத்திரைகளை விழுங்கி அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டதாக சிறை அதிகாரிகளிடம் குணால் கோஷ்  தெரிவித்ததையடுத்து, உடனடியாக அங்குள்ள எஸ்.எஸ்.கே. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாரதா நிதி குழுமத்தின் ஊடக செயல்பாடுகளை கவனிக்கும் தலைமை பொறுப்பை வகித்த கோஷின் பெயர், இந்த நிதி முறைகேடு குறித்து விசாரித்த சி.பி.ஐ.யின் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றதால் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார் என்பது  குறிப்பிடத்தக்கது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு