Published:Updated:

சேலத்தில் மாணவி கழுத்தறுத்து கொலை: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்!

 சேலத்தில் மாணவி கழுத்தறுத்து கொலை: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்!
சேலத்தில் மாணவி கழுத்தறுத்து கொலை: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்!
 சேலத்தில் மாணவி கழுத்தறுத்து கொலை: தமிழகத்தில் தொடரும் பயங்கரம்!

சேலம்: வீட்டில் தனியாக இருந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் வன்னியர் நகரைச் சேர்ந்த துரைராஜ், தனியார் கிரானைட் குவாரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகள்கள் ஹரிணி, தேஜாஸ்ரீ. மூத்த மகள் ஹரிணி சென்னையில் வேலை செய்து வருகிறார். தேஜாஸ்ரீ அழகாபுரம் விநாயகா வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஹரிணிக்கு உடல்நிலை சரியில்லாததால் துரைராஜ் மனைவி கஸ்தூரி சென்னைக்கு சென்றுவிட்டார். துரைராஜ் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், தேஜாஸ்ரீ மட்டும் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 7 மணியளவில் துரைராஜ் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்திருக்கிறது. பதற்றத்துடன் துரைராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மகள் தேஜாஸ்ரீ பிணமாக கிடந்திருக்கிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துரைராஜ் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முன் பல்சர் பைக்கில் சிலர் நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அதில் ஒருவன், தேஜாஸ்ரீயிடம் பேசிக் கொண்டிருந்ததை அக்கப்பக்கத்தினர் பார்த்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும், தேஜாஸ்ரீயை கொலை செய்தவர்கள் யார்? அந்த பைக்கில் வந்தவர்கள் தான் தேஜாஸ்ரீயை கொலை செய்தார்களா? அவர்கள் யார்? பாலியல் பலாத்காரம் எதுவும் நடந்துள்ளதா? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியில் பள்ளியிலேயே மாணவர் ஒருவர் சகமாணவர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மாணவி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.புண்ணியமூர்த்தி

படம்: எம்.விஜயகுமார்