Published:Updated:

வீடியோ கான்பரன்சிங் புகார் மையங்கள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

வீடியோ கான்பரன்சிங்  புகார் மையங்கள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோ கான்பரன்சிங் புகார் மையங்கள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோ கான்பரன்சிங்  புகார் மையங்கள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

பெங்களூரு: காவல்நிலையம் சென்று காத்திருந்து புகார் அளிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில்,பெங்களூரு காவல்துறை வீடியோ கான்பரன்ஸ் புகார் மையங்களைத் திறந்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று இந்த வீடியோ கான்பரன்ஸிங்  மையங்களைத் தொடங்கி  வைத்தார்.

குற்றங்கள் குறித்துப் புகார் தெரிவிக்க காவல்நிலையம் செல்வதால் அதிக கால விரயம் ஆகிறது என்பதால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பொது மக்கள் புகார் அளிக்கும் முறை பெங்களூருவில் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு காவல்துறையினர் தரப்பில்,  பாலியல் குற்றங்கள் மற்றும் திருட்டுகள் உள்ளிட்டவை பற்றி புகார் அளிக்க காவல்நிலையம் தேடிச்செல்ல பொது மக்களும், பாதிக்கப்பட்டோரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகப் புகார்கள் வந்தன. எனவே குற்றவாளிகள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக இந்த மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 2 மையங்கள் பெங்களூரு நகரத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  விரைவில் பெங்களூருவின் முக்கிய இடங்களில் வீடியோ கான்பரன்ஸ் மையங்கள் திறக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். மையங்கள் போலவே இந்த வீடியோ கான்பரன்ஸ் மையங்கள் செயல்படும். புகார் தெரிவிக்க விரும்புவோர் இந்த எந்திரத்தின் முன்னே நின்று அதற்கான பட்டனை அழுத்தி கணினித் திரையில் தெரியும் காவல்துறை அதிகாரியிடம் புகார் கூறலாம். தகவல் பதியப்பட்டு உடனே அதற்கான ஸ்லிப் புகார்தாரருக்கு எந்திரம் மூலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.