தர்மபுரி என்றாலே சாதி வெறி சம்பவங்கள் என்றாகிவிட்டது. இதோ... விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் இருந்த காரணத்துக்காகவே கால் உடைக்கப்பட்டு நடைப்பிணமாக்கப்பட்டுள்ளார் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ்.

பாலக்கோடு தாலுக்கா சாமனூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல. அந்தப் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். ஊர் ஊராக சென்று பாத்திர வியாபாரம் செய்துவந்த அவர், இப்போது சென்னை அரசு பொது மருத்துவமனையில் மூட்டோடு இடது கால் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

என்ன நடந்தது? அவரே கூறுகிறார்...

''11 வருடங்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தேன். கட்சிப் பணியாற்றி படிப்படியாக ஒன்றியச் செயலாளர் பதவிக்கு முன்னேறி வந்துள்ளேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்துகொண்டு தலித்களுக்காக போராடுவது எங்கள் ஊரில் சிலருக்குப் பிடிக்கவில்லை. '--------- பசங்க இருக்கும் கட்சியில் நீ ஏன் சேர்ந்தே? அந்தக் கட்சியில் இருக்காதே... எங்களோடு வந்துவிடு. எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறோம்’ என்று கவுன்சிலர் ராஜா மிரட்டி வந்தார். அவரும் அவரது உறவுகளும் வைத்ததுதான் எங்கள் ஊரில் சட்டம். அவர்களை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. எதிர்த்துப் பேசினால் அவ்வளவுதான். அதற்குப் பயப்படாமல் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தேன்.

இந்த நிலையில்தான், கடந்த 15-ம் தேதி சாமனூர் ஊராட்சித் தலைவர் லெட்சுமணனிடம் தமிழக அரசின் இலவச வீடு தொடர்பான விவரம் கேட்டேன். 'மனு கொடுத்து மூன்று மாதம் ஆகிவிட்டதே... எப்போது வீட்டுக்கான ஆர்டர் கிடைக்கும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றார். நானும் கிளம்பிவிட்டேன். அன்று பிற்பகலில் அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்தேன்.

அப்போது, இலவச வீடு தொடர்பாக கவுன்சிலர் ராஜாவுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ''---------------- கட்சியில் இருக்கும் நீ, அவனிடம் வீடு கேட்க வேண்டியதுதானே?’ என்று திட்டினார். அப்போது அவருடன் இருந்த சிலர், என்னை அடித்தனர். இந்தப் பிரச்னையைக் கேள்விப்பட்டு ஓடிவந்த எனது மனைவி சகுந்தலா, சமாதானம் கூறி என்னை வீட்டுக்கு அழைத்து வந்தார். அதன் பிறகு, திடீரென்று எங்கள் வீட்டுக்குள் பத்து, பதினைந்து பேர் புகுந்து என்னை அலேக்காக தூக்கித் தெருவுக்குக் கொண்டு சென்றனர்.

கவுன்சிலர் ராஜா, குட்டிப்பையன் (பெயரே அதுதான்!), பரந்தாமன் உள்ளிட்டோர் எனது காலை கால்வாயில் வைத்து மிதித்தும் அடித்தும் உடைத்தனர். வல்லப்பட்டி முருகன், மூர்த்தி, நந்தன், சந்தோஷ் என்று பலர் கொடூரமாக அடித்தனர். இடது காலை உடைத்துவிட்டு, ஆத்திரம் அடங்காமல் அருகில் உள்ள கரன்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர். கால், மார்பு, வயிறு என்று அவர்கள் அடித்ததில் சிறிது நேரத்தில் மயங்கிச் சாய்ந்துவிட்டேன்.

மருத்துவமனையில் எனது கால் ஒன்றை எடுத்துவிட்டனர். இன்னொரு கால் எலும்பும்

முறிந்துவிட்டது. நடக்கவே முடியாது என்கிறார்கள். எனது குடும்பத்தை எப்படி காப்பாற்றப்போகிறேனோ?'' என்று கதறி அழுதார்.

அருகில் இருந்த அவரது மகன் சந்தோஷ், ''அப்பா உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போது, 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்யவும், போலீஸுக்கு போன் செய்யவும் கூடாது என்று எனது செல்போனை பறித்துக்கொண்டனர். பைக்கில் வெளியே போய்விடக் கூடாது என்று தடுத்தனர். அவர்களைப் பார்த்து ஊரே பயந்து ஒதுங்கி இருக்கும்போது நானும் செய்வதறியாது நின்றேன்'' என்றார் கண்ணீரோடு.

தங்கராஜின் மனைவி சகுந்தலா, ''காலை உடைத்து கரன்ட் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தது ஊருக்கே தெரியும். யாரும் உதவிக்கு வரவில்லை. எதிர்த்து தட்டிக் கேட்கவில்லை. வெறி தீரும் வரை அடித்து, பிணமாகிவிட்டான் என்று அப்படியே போட்டிருந்தனர். மூன்று மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில், கரன்ட் கம்பத்திலேயே கட்டப்பட்டு கிடந்தார். யாரோ புண்ணியவான் போலீஸுக்குத் தகவல் சொல்லவே, அவர்கள் வந்தனர். போலீஸார் 108-க்கு போன் செய்த பிறகுதான் ஆம்புலன்ஸ் வந்தது. பாலக்கோடு, தர்மபுரி, சேலம் என்று அரசு மருத்துவமனைகளுக்கு சென்றோம். அங்கெல்லாம் பார்க்க முடியாது என்று கூறிவிட்டர்கள். கடைசியில் சென்னைக்கு கொண்டுவந்தோம். சாதி பிரச்னையை முன்வைத்து எனது கணவரை நடைப்பிணமாக்கி விட்டார்களே...'' என்று மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் பேசினோம். ''உடல் முழுவதும் பலத்த உள்காயம் இருக்கிறது. வயிறு, அடி வயிறு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கால் அழுகிவிட்டதால், அதை மூட்டோடு எடுத்துவிட்டோம். அந்தக் காலில் தொடை பகுதியிலும் காயம் உள்ளது. சரியாகவில்லை என்றால், தொடை வரை கட் செய்ய வேண்டியது இருக்கும். இன்னோரு காலும் நடக்கும் அளவுக்கு இல்லை'' என்றனர்.

சாமனூர் கிராமத்துக்குச் சென்றோம். ஊரில் இருந்த பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. இருக்கும் ஒரு சிலரை விசாரித்தபோது, எதுவும் பேச மறுத்துவிட்டனர். கவுன்சிலர் ராஜாவும் தலைமறைவாக இருப்பதால், அவரது கருத்தை அறிய முடியவில்லை.

மாரண்டஹள்ளி இன்ஸ்பெக்டர் ரவியிடம் கேட்டபோது, ''கிராம சபை கூட்டத்தில் குடித்துவிட்டு பேசியதற்காக அடித்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக நான்கு பேரை கைதுசெய்திருக்கிறோம். மீதி உள்ளவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை தேடி வருகிறோம். கிடைத்ததும் கைதுசெய்து விசாரிப்போம்'' என்றார்.

எத்தனை பெரியார்கள் வந்தாலும் இந்த சாதி வெறியை ஒழிக்க முடியாதோ?

- எஸ்.முத்துகிருஷ்ணன், வீ.கே.ரமேஷ்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்