Published:Updated:

மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்!

Vikatan Correspondent
மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்!
மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்!

விழுப்புரம்:  பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்று காவலரும், ஆசிரியரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்!

விழுப்புரம் மாவட்டம், வானூரை சேர்ந்த செல்வியும், ராஜாவும் (பெயர் மாற்றம்) காதலர்கள். பிளஸ் 2 படிக்கும் செல்வியின் வீட்டில் காதல் விவகாரம் தெரியவந்ததால் செல்வியை வந்தவாசியில் உள்ள ஒரு உண்டுஉறைவிடப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர் பெற்றோர். பொங்கல் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த செல்வி, தன் காதலர் ராஜாவுடன் சேர்ந்து மயிலம் முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு இருவரும் கோயில் மலையடிவாரத்தில் உள்ள மறைவான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியராக பணிபுரியும் அவரது நண்பர் வீரப்பன் ஆகியோர் ராஜாவை தாக்கிவிட்டு செல்வியை வலுகட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மறைவான இடம் நோக்கி சென்றுள்ளனர்.

மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற காவலர், ஆசிரியர்!

அப்பொழுது ரோந்து பணியில் இருந்த மயிலம் காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன், இளம்பெண் வலுகட்டாயமாக கடத்தி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்ததுடன், இளம்பெண்ணையும் பத்திரமாக மீட்டார்.

இளம்பெண்ணை கடத்தி சென்ற இருவரை கைது செய்து விசாரித்த போது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய கடத்தி சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும்  அவர்களிடம் இருந்து ஆறு காண்டம் பாக்கெட்களையும், சாலையில் குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் படுத்து கிடந்தவர்களிடம் இருந்து திருடிய மூன்று செல்போன்களையும், 14 ஆயிரம் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பிளஸ் 2 மாணவியை காவலரும், ஆசிரியரும் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

-ஆ.நந்தகுமார்

படங்கள்:
தே.சிலம்பரசன்