Published:Updated:

டீ யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.2 கோடி அபேஸ்: மும்பையில் பரபரப்பு!

Vikatan Correspondent
டீ யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.2 கோடி அபேஸ்: மும்பையில் பரபரப்பு!
டீ யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.2 கோடி அபேஸ்: மும்பையில் பரபரப்பு!
டீ யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.2 கோடி அபேஸ்: மும்பையில் பரபரப்பு!

மும்பை:  சக ஊழியர்களுக்கு டீ யில்  மயக்க மருந்து கலந்து கொடுத்து ரூ.2 கோடியை அபேஸ் செய்த ஊர்க் காவல் படைவீரரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நூதன கொள்ளை மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் ஊர்க் காவல் படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்ரே ஆலம் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார். ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை நிரப்ப கொண்டு செல்லும் போது அவர்களுடன் பாதுகாப்புக்காகச்  செல்வது இவரின்  பணி. நேற்று(வெள்ளி கிழமை) மதியம் வழக்கம் போல் விலே பார்லி என்ற இடத்தில் பணத்தை நிரப்புவதற்காக ரூ.2 கோடியை எடுத்துக் கொண்டு டிரைவர் மற்றும் 2 ஊழியர்களுடன் சாத்ரே ஆலமும் சென்றனர். செல்லும் வழியில் டீ சாப்பிடலாமா என ஆலம் தனது சக ஊழியர்களைக்  கேட்டுள்ளார். உடனே அருகில் உள்ள டீக்கடையில் வேன் நிறுத்தப்பட்டது. டிரைவர் உள்ளிட்ட 3 பேரும் டீ குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் சக ஊழியர்கள் 2 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். ஆனால் டிரைவருக்கு மயக்கம் வரவில்லை என்று கூறப் படுகிறது.மிலன் என்ற இடத்தில் சுரங்க பாதை அருகே வேன்  சென்ற போது மாருதி ஜென்னில் வந்த 3 பேர் வேனை வழிமறித்து டிரைவரை தாக்கினர். அப்போது ரூ.2 கோடி பணத்தை சுருட்டிக் கொண்டு அவர்களுடன் சாத்ரே ஆலமும் தப்பினார். இதனை கண்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.

 இந்த துணிகர சம்பவம் குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.