Published:Updated:

தயாநிதிமாறன் உதவியாளரை காவலில் விசாரிக்கக்கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!

தயாநிதிமாறன் உதவியாளரை காவலில் விசாரிக்கக்கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!
தயாநிதிமாறன் உதவியாளரை காவலில் விசாரிக்கக்கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!
தயாநிதிமாறன் உதவியாளரை காவலில் விசாரிக்கக்கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!

சென்னை: பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட தயாநிதிமாறனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் உள்பட 3 பேரை காவலில் விசாரிக்கக்கோரிய சி.பி.ஐ. மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு சொந்தமான இணைப்புகளை, தனது சகோதரர் தொலைக்காட்சிக்கு தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார் கடந்த மாதம் 21ஆம் தேதி தயாநிதிமாறனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் கவுதமன், தொலைக்காட்சி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து, அவர்களை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.ஐ. போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

சி.பி.ஐ. நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மாலா, சி.பி.ஐ.யின் மனுவில் கவுதமன் உள்பட 3 பேரையும் காவலில் எடுப்பதற்கான தெளிவான காரணங்கள் இல்லை. மனுவையும் சி.பி.ஐ. முறையாக தாக்கல் செய்யவில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தார்.