ஓரின சேர்க்கை இரட்டை கொலையில் முடிந்தது! | Double murder in dispute homosexual

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (14/02/2015)

கடைசி தொடர்பு:13:07 (14/02/2015)

ஓரின சேர்க்கை இரட்டை கொலையில் முடிந்தது!

நெல்லை: ஓரின சேர்க்கை தகராறில் இரட்டை கொலை நடந்துள்ளது சுரண்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் மாரிச்செல்வம். 16 வயதான் இவர் தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். அவரது நண்பர் முருகன், தென்காசியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆம் தேதி பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் பகுதியில் ஒரு முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி. நரேந்திரன் நாயர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மாணவர்கள் கொலை தொடர்பாக விசாரணை நடத்தியதில், பாவூர்சத்திரம் குறும்பலாபேரியை சேர்ந்த தங்கசாமி மகன் அழகர் என்ற சுடலைசாமி (36) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் கடந்த 4 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வருவாய்த்துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்துள்ளனர்.

இதுதொடர்பாக உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளோம். அழகருக்கு திருமணமான சில நாட்களிலேயே அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். கீழப்பாவூரில் பெட்டிக்கடை நடத்தி வந்த அழகர், அங்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய வரும் பள்ளி மாணவர்களுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு அவர்களின் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். மேலும், அவர்களுடன் தவறாக நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

மேலும், மாணவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும்போதும், அழகர் வீட்டில் ரத்தக்கறை படிந்த துணிகளை பார்க்கும் போதும் அழகருக்கும், கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இடையே ஓரின சேர்க்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மாரிச்செல்வத்தையும், முருகனையும் கொலை செய்தது அழகர் தான் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் அழகருடன் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணை நடத்தி கைது செய்வோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்