மகளிர் தினத்தன்று ஆந்திரா பெண் பாலியல் பலாத்காரம்!

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் கால்சென்டர் பெண் ஊழியர் ஒருவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவிலுள்ள கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வரும், விசாகப்பட்டினத்தின் புறநகரான பெந்தூத்தியைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அவரை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று, ஆளில்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அவரிடம் இருந்த செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு, விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் இறக்கிவிட்டு, அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அந்த பெண் ஊழியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், ஆந்திராவில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!