Published:Updated:

கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளின் படம் வெளியீடு!

Vikatan Correspondent
கன்னியாஸ்திரியை  பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிகளின் படம் வெளியீடு!
கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளின் படம் வெளியீடு!

கொல்கத்தா:  மேற்கு வங்காள மாநிலத்தில் வயதில் முதிர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளின் படங்களை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டம் கங்கனாப்பூரில் இயேசு சபைக்குச்  சொந்தமான கான்வெட் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் 11 மணி அளவில் முகமூடி அணிந்த 7, 8 பேர் கொண்ட கும்பல் திடீரென புகுந்தனர்.

முதலில், பள்ளிக்கூட காவலாளியை கட்டிப்போட்ட அவர்கள், பள்ளியின் முதல்வரின் அறையை நோக்கி சென்றனர். அப்போது, அங்கு பள்ளியின் 72 வயது மூத்த கன்னியாஸ்திரி உறங்கிக்கொண்டிருந்தார். பக்கத்து அறைக்கு தூக்கிச்சென்று அவரை அந்த கும்பல் கற்பழித்தது.

பின்னர், பள்ளியின் அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம், மடிக்கணினி, செல்போன்கள், கேமி ராக்களை கொள்ளையடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கன்னியாஸ்திரியை  பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிகளின் படம் வெளியீடு!

 படுகாயமடைந்த கன்னியாஸ்திரி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக்  கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், இந்த படுபாதகச்  செயலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்து சாலைமறியல் செய்தனர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் அருகில் இருந்த ரனகாட் ரயில் நிலைய தண்டவாளத்தின் மீது அமர்ந்து ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். தண்டவாளங்களில் தடுப்புகளையும் போட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாவட்ட ஆட்சியர் செலிம், போலீஸ் சூப்பிரண்டு அர்னாப் கோஷ் மற்றும் போலீசார் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக்  கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியும் அளித்தனர்.

இதையடுத்து, சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு ரயில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ரயில் மறியல் காரணமாக நாடியா மற்றும் சீல்தா நகரங்களுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

கன்னியாஸ்திரியை  பாலியல் வன்கொடுமை  செய்த குற்றவாளிகளின் படம் வெளியீடு!

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உடனடியாக சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து கூறிய மேற்கு வங்காள மாநில கவர்னர் கே.என் திரிபாதி கூறுகையில், "குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மாநில அரசு இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் தேவை" எனக் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சி.ஐ.டி. அதிகாரிகள், பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனைக் கொண்டு இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த வீடியோ காட்சியில் 7 முதல் 8 பேர் பதிவாகி உள்ளனர். இந்த  சிசிடிவி படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ 1.லட்சம் பரிசளிப்பதாக கொல்கத்தா போலீசார் அறிவித்து உள்ளனர். 

இந்தக் கொடூர குற்றத்தில் ஈடுபட்ட  8  குற்றவாளிகளில் 4 பேரின் அடையாளம் தெரியவந்து உள்ளதாகக்  கூறப்படுகிறது.