Published:Updated:

`காதலனுடன் பிறந்தநாள்; அத்துமீறிய கும்பல்!’- கோவையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்

கோவையில், 17 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், நான்கு பேர் போக்ஸோ பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல்
பாலியல்

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் பிளஸ் 1 படித்துவருகிறார். அந்தச் சிறுமி, தனது உறவினரைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளார்.

பாலியல்
பாலியல்

இந்நிலையில், கடந்த 26-ம் தேதி சிறுமிக்குப் பிறந்தநாள் வந்துள்ளது. இதையடுத்து, பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட காதலனுடன் அதே பகுதியில் உள்ள கார்டனுக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அந்த கார்டனுக்குள் இருந்த சுமார் 6 பேர் கொண்ட கும்பல், அந்தச் சிறுமியின் காதலரைத் தாக்கியுள்ளனர். மேலும், அதைப் புகைப்படமும் எடுத்துள்ளனர். பிறகு, காதலனின் முன்பே அந்தச் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவும் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலியல்
பாலியல்

இதையடுத்து, அன்றைய தினம் காதலனின் வீட்டுக்குச் சென்று தங்கிய சிறுமி, அடுத்த நாள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28) மற்றும் நாராயணமூர்த்தி (30) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள்மீது, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 5 (யு), 6, 9, 10, 13, 14 மற்றும் 17 ஆகிய பிரிவுகள், போக்ஸோ பிரிவு, இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாலியல்
பாலியல்

ஆனால், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை, தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.