Published:Updated:

``மயக்கமடைய வைத்து 4 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்!'' - 55 வயது பெண் போலீஸில் புகார்

பாலியல் வன்கொடுமை

மயக்க நிலையில் தன்னை நான்கு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவிலுள்ள ஆசிரமத்தில், நான்கு பேர் சேர்ந்து போதைப்பொருளைக் கொடுத்து, மயக்கநிலையில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்தப் பெண் அளித்தப் புகாரின்பேரில், துர்வாசா, சோட்டே மௌனி, பர்ஹே மௌனி, மன்மோகன் ஆகிய நான்கு பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``பிரயாக்ராஜிலுள்ள ஓர் ஆசிரமத்தில் 55 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அக்டோபர் 4-ம் தேதி, 4 பேர் சேர்ந்து தனக்கு போதைப்பொருள்களைக் கொடுத்து, மயக்கமடைய வைத்து பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக வெளியில் கூறக்கூடாது எனக் கொலை மிரட்டல் வந்ததாகவும் அந்தப் பெண் கூறினார். நாங்கள் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.