Published:Updated:

வங்கி மேலாளரைப்போல போலி கையொப்பம்; 55 சவரன் கையாடல் - தங்கநகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் கைது

பாலாஜி சரவணன் - எஸ்.பி

தூத்துக்குடியில், வங்கி மேலாளரைப்போல போலியாகக் கையொப்பமிட்டு 55 சவரன் தங்கநகைகள் மோசடி செய்த தங்கநகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

வங்கி மேலாளரைப்போல போலி கையொப்பம்; 55 சவரன் கையாடல் - தங்கநகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில், வங்கி மேலாளரைப்போல போலியாகக் கையொப்பமிட்டு 55 சவரன் தங்கநகைகள் மோசடி செய்த தங்கநகை மதிப்பீட்டாளர் உட்பட 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
பாலாஜி சரவணன் - எஸ்.பி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்தியன் வங்கியின் கிளை இயங்கிவருகிறது. இந்தக் கிளையின் நகை மதிப்பீட்டாளராகப் படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுடலை என்ற சுடலைராஜ் பணிபுரிந்துவந்தார். 23.07.2018 முதல் 17.06.2020 வரையிலான காலகட்டத்தில் இந்த வங்கியில் நகைக்கடன் பெற வருகைதந்த வாடிக்கையாளர்களிடம், தங்கநகையின் பேரில் அவர்கள் கேட்கும் கடன் தொகையைவிட அதிகமான கடன் தொகைக்கு அடமானம் வைத்திருக்கிறார்.  

சுடலைராஜ் - ராம்குமார்
சுடலைராஜ் - ராம்குமார்

அடமானம் வைக்கப்பட்ட தங்கநகைகளை, நகைகளின் உரிமையாளருக்குத் தெரியாமல் அடமானக் கடன் அட்டையில் வங்கி மேலாளரின் கையொப்பத்தைப் போலியாக போட்டிருக்கிறார். மேலும் நகைகளைத் திருப்பி, அவருடைய ஊரைச் சேர்ந்த குமாரவேல், ராம்குமார் மற்றும் குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் பெயர்களில் அதிக தொகைக்கு அடமானம் வைத்திருக்கிறார். இவர்களின் பெயர்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சிலவற்றை வங்கியிலிருந்து திருப்பி அதனை அவர்களே வைத்துக்கொண்டனர். இது நகைகள் சரிபார்ப்பின்போது தெரியவந்திருக்கிறது. இதுவரை 55 சவரன் தங்கநகைகள் மற்றும் ரூ.9,78,786 பணம் ஆகியவற்றைக் கையாடல் செய்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இது சம்பந்தமாக அந்த வங்கிக் கிளையின் மேலாளர் சங்கரசுப்பிரமணியன் 2022, செப்டம்பர் 9-ம் தேதி  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான தனிப்படையினர் சுடலை என்ற சுடலைராஜ், ரமேஷ், குமாரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோரைக் கைதுசெய்தனர். போலீஸாரின் விசாரணையில், “தங்களுக்குக் கடன் இருந்ததாகவும், அதனால் வாடிக்கையாளர்களின் நகைகளைக் கையாடல் செய்தோம்” எனக் கூறியிருக்கின்றனர்.

குமாரவேல் - ரமேஷ்
குமாரவேல் - ரமேஷ்

இந்த சம்பவத்தையறிந்து தங்கநகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள், வங்கியின் முன்பு திரண்டனர். அவர்களின் தங்கநகைகள் திருப்பி ஒப்படைக்கப்படும் எனக் குற்றப்பிரிவு போலீஸார் உறுதியளித்திருக்கின்றனர். தங்கநகை மதிப்பீட்டாளரே வங்கி மேலாளரின் கையொப்பத்தைப் போலியாகப் போட்டு மோசடி செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.