Published:Updated:

ம.பி: லாரியோடு ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை - 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

கொள்ளை

மத்தியப் பிரதேசத்தில் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்களை லாரி டிரைவரோடு, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கொள்ளையடித்திருக்கின்றனர்.

ம.பி: லாரியோடு ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை - 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்!

மத்தியப் பிரதேசத்தில் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்களை லாரி டிரைவரோடு, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கொள்ளையடித்திருக்கின்றனர்.

Published:Updated:
கொள்ளை

நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடந்தவண்ணமே இருந்தாலும், அவற்றில் அவ்வப்போது சில சம்பவங்கள் சினிமாவையும் மிஞ்சுமளவுக்கு நடந்திருக்கும். அந்த வரிசையில் மத்தியப் பிரதேசத்திலும் அத்தகைய சம்பவமே நடந்திருக்கிறது. எப்படி `மங்காத்தா' படத்தில் லாரியில் பணத்தைக் கொண்டுசென்ற கன்டெய்னரைக் கடத்துவார்களோ, அதேபோல மத்தியப் பிரதேசத்தில் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்களை லாரி டிரைவரோடு, அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் கொள்ளையடித்திருக்கின்றனர்.

க்ரைம் - கொள்ளை
க்ரைம் - கொள்ளை

வியாழக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், கொள்ளையடித்தவர்கள் யார் என இதுவரை தெரியவில்லை. இருப்பினும் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை, சம்பவம் நடந்த அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளேயே, குற்றம் நடந்த இடத்திலிருந்து 400 கி.மீ தொலைவில், இந்தூர் அருகே வேறொரு டிரக்கிலிருந்து போலீஸார் மீட்டிருக்கின்றனர். ஆனால், கொள்ளையர்கள் மட்டும் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சாகர் காவல் நிலைய கண்காணிப்பாளர் தருண் நாயக், ``வியாழன் இரவன்று, 12 கோடி மதிப்பிலான செல்போன்கள்கொண்ட கன்டெய்னர் லாரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து குருகிராம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலை எண்-44 மகராஜ்பூர் கிராமத்துக்கு அருகே, அடையாளம் தெரியாத நான்கு கொள்ளையர்கள் லாரி ஒன்றைக் கடத்திச் சென்றதாக கவுர்ஜமர் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

போலீஸ்
போலீஸ்

இதில் கொள்ளையர்கள் லாரி டிரைவரைக் கடத்திச் சென்று பின்னர் அவரை நரசிங்பூரில் இறக்கிவிட்டுள்ளனர்" என்று கூறினார். மேலும், அடையாளம் தெரியாத இந்த நான்கு கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, கூடுதல் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.