Published:Updated:

`4 வயது குழந்தை இறந்தது எப்படி?'- சந்தேக வளையத்தில் தாயின் நண்பன்

எஸ்.மகேஷ்

சென்னை புழல் பகுதியில் 4 வயது குழந்தை மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் புழல் போலீஸார் திணறி வருகின்றனர்.

yazhini
yazhini

சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், கக்கன்ஜி காலனி 3-வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பவானி (25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு யாழினி (4) என்ற மகள் இருந்தார். ஒன்றரை வயதில் மகனும் உள்ளார்.

yazhini
yazhini

இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பவானி சென்றுவிட்டார். தற்போது பவானி, கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் (24) என்பவருடன் புழல் பகுதியில் வாழ்ந்துவருகிறார்.

குழந்தை யாழினிக்கு உடல்நிலை சரியில்லை என்றுகூறி புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் பவானி. அங்கு யாழினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் முதல் கணவர் ரமேஷுக்கு தெரியவந்ததும் அவர் புழலுக்கு வந்தார். யாழினி மரணம் குறித்து விசாரித்தார். ஆனால், யாரும் அவருக்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் யாழினி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புழல் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

Vikatan

இதற்கிடையில், யாழினியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து புழல் போலீஸார் பவானி, ஆசிப் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``யாழினி மரணம் தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்டமாக ஆசிப், பவானியிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்களைத் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையிலும் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

Child
Child

இதற்கிடையில், தங்களின் சந்தோஷத்துக்கு யாழினி இடையூறாக இருந்ததால் அவரை ஆசிப் காலால் மிதித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதை புழல் போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

police station
police station

பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாக புழல் போலீஸார் கூறினாலும், யாழினி மரணத்தில் சிலரைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கொடுங்கையூரைச் சேர்ந்த ஆசிப் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில் பவானிக்கு ஒன்றரை வயதில் கைக்குழந்தை உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது

Vikatan

அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரில் கடந்த மே மாதம் கிஷோர் என்ற 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிஷோரின் அம்மா புவனேஸ்வரி அவரின் நண்பன் கார்த்திகேயன் ஆகியோரை அம்பத்தூர் போலீஸார் கைது செய்தனர். கிஷோரைக் கொலை செய்துவிட்டு நண்பனுடன் புவனேஸ்வரி நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. `அம்பத்தூர் போலீஸாரைப் போல புழல் போலீஸாரும் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்' என்கின்றனர் ரமேஷின் உறவினர்கள்.