எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க! | whatsapp, fraud, bank

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (02/04/2015)

கடைசி தொடர்பு:18:17 (02/04/2015)

எப்படியெல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க!

வாட்ஸ் அப்பில் வலம் வரும் லேட்டஸ்ட் பதிவு இது. வாடிக்கையாளரிடம் வங்கி மேனேஜர் என்று போனில் பேசி அவருடைய ஏ.டி.எம் நம்பரை கேட்கிறார் ஒரு மோசடி பேர்வழி. அந்த உரையாடல்தான் இது...
 

வாடிக்கையாளர்: ஹலோ....
மேனேஜர்: ஹலோ.... வணக்கம் சார்.... குட்ஆப்ட்நூன்.
வாடிக்கையாளர்: வணக்கம் சார்..... சொல்லுங்க சார்.
மேனேஜர்: சார்...... நான் வந்து ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேசுறேன். ராம்குமார்.. பேங்க் மேனேஜர்.
வாடிக்கையாளர்: சார்..... யாருங்க சார்.

மேனேஜர்: ஏடிஎம் ஹெல்ப் லைனிலிருந்து பேங்க் மேனேஜர் பேசுறேன்.  ராம்குமார்.
வாடிக்கையாளர்: சார் வணக்கம் சொல்லுங்க சார்.
மேனேஜர்: ஏ.டி.எம் கார்டு ரெனிவல் பண்ணணும்..... ரிஜிஸ்ட்ரேசன் பண்ணணும்... 2016ல்ல ரெனிவல் பண்ணணும். இப்போது ரெனிவல் பண்ணணும்.
வாடிக்கையாளர்: என் நம்பர் பண்ணணுமா.

மேனேஜர்: ஆமாம்... ஆமாம்... ஏ.டி.எம் கார்டு 6 மணிக்கு க்ளோஸ் ஆகிவிடும். மறுபடியும் ஏ.டி.எம் கார்டு வாங்கணும். இப்ப நான் பண்ணி தாரேன். நான் ஹெல்ப் பண்றேன். உங்க ஏ.டி.எம்.ல்ல கார்டில 16 நம்பர் இருக்கும்.
வாடிக்கையாளர்: எந்த அக்கவுண்ட் தெரியல
மேனேஜர்: அந்த இரண்டையும் பண்ணணும். கவர்மெண்டல இருந்து பேசுறேன். ரெனிவல் பண்ணவுடன் மெஜேஜ் அனுப்புறேன். ஏ.டி.எம் ரெனிவல் பண்ணணும். ரெனிவல் பண்ணலன்னா க்ளோஸ் ஆகிடும். ஏ.டி.எம் கார்டு மேல 16 நம்பர் இருக்கும். சொல்லுங்க சார். அந்த நம்பர சொன்னா ரெனிவல் ஆகிவிடும். நான் பண்ணி தாரேன்.
(மேனேஜரின் இந்த பேச்சில் சுதாரித்துக் கொள்கிறார் வாடிக்கையாளர்)
சிறிது நேரம் அமைதி

மேனேஜர்: சார்...
வாடிக்கையாளர்: சார்... என்னுடைய பெயர் சொல்லுங்க.
மேனேஜர்: ஏ.டி.எம் நம்பர் சொல்லுங்க.
வாடிக்கையாளர்: நீங்க கால் பண்ணி இருக்கீங்க... என்னுடைய அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க.
மேனேஜர்: அக்கவுண்ட் நம்பர் இல்ல. நான் ரெனிவல் பண்ணி தாரேன்.
வாடிக்கையாளர்: என்னுடைய பெயர் சொல்லுங்க

மேனேஜர்: தேங்யூ சார்.. உங்க ஏ.டி.எம். க்ளோஸ் ஆகிடும் திரும்பவும் இந்த நம்பர்ல கான்டக்ட் பண்ணுங்க.
வாடிக்கையாளர்: க்ளோஸ் ஆனா பரவாயில்ல. நம்பர் சொல்லச் சொன்னா சொல்ல மாட்டேங்கிறீங்க. என்னுடைய ஏ.டி.எம். நம்பரை கேட்டு போர்ஜரி பண்ண பார்க்கிறீங்களா.

மேனேஜர்: ....(நம்பர் சொல்லாததால் தகாத வார்த்தையால் திட்டுவிட்டு போன் இணைப்பை துண்டிக்கிறார் அந்த மோசடி பேங்க் மேனேஜர்)

வடிவேல் சொன்னதைப்போல இந்த மாதிரி ஏமாத்துறக்கு இந்த மேனேஜர் போல பலர் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல.

வங்கியிலிருந்து யார் பேசினாலும் உங்களுடைய ஏ.டி.எம் கார்டில் உள்ள ரகசிய நம்பரை போனில் யாரிடமும் பகிர வேண்டாம்.

-எஸ்.மகேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்