Published:Updated:

`6 மாதங்களாக வேலை இல்லை, மனஅழுத்தம்!'- குழந்தைகளோடு விபரீத முடிவெடுத்த தந்தை

டெல்லி மெட்ரோ
டெல்லி மெட்ரோ

டெல்லியில் ஓடும் மெட்ரோ ரயில் முன்பு பாய்ந்து 45 வயதான ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, ஷாலிமர் பாக் பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபர், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். இவருக்கு, 16 வயதில் ஒரு பெண்ணும் 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்துள்ளனர்.

குற்றம்
குற்றம்
மாதிரி புகைப்படம்

இந்நிலையில், நேற்று மாலை 3 மணிக்கு, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்படி கணவரிடம் கூறிவிட்டு மனைவி மட்டும் தனியாக மார்கெட்டுக்குச் சென்றுள்ளார். அவர், மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. பின்னர், ஹவுஸ் ஓனரிடம் இருக்கும் மற்றொரு சாவியை வாங்கி வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்த மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

`தாய் கொலை... அந்தமானில் நண்பருடன் சுற்றுலா!’- பெங்களூரு பெண்ணை வளைத்த போலீஸ்

தன் இரண்டு பிள்ளைகளும் இரண்டு அறைகளில் இறந்து கிடந்துள்ளனர். வீட்டில் கணவர் இல்லை. இதனால் அதிர்ந்த அந்தப் பெண், உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் ஹைதர்பூர் பகுதி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வந்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் தற்கொலை செய்துகொண்டவர் அந்தப் பெண்ணின் கணவர்தான் என்பது தெரியவந்துள்ளது.

இறப்பு
இறப்பு
மாதிரி புகைப்படம்

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில், கணவரே தன் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு மெட்ரோ நிலையம் சென்று தானும் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது. “அவரது வீட்டிலிருந்து எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. குடும்பத்தின் நிதிநிலை காரணமாக, அவர் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். அதன் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்” என்று வடமேற்கு டெல்லியின் துணை கமிஷனர் விஜய் ஆனந்த ஆர்யா கூறியுள்ளார்.

காதல் தோல்வி; விரக்தி; துப்பாக்கிச்சூடு! - டெல்லியில் தேர்தலுக்குமுன் கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிகாரிகள், “தற்கொலை செய்துகொண்ட அந்த நபர், உப்புக் காகிதம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துவந்துள்ளார். ஆனால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. வேலை இழந்ததால், குடும்பத்தின் நிதி நிலை மிகவும் மோசமாகியுள்ளது. வேலை இழப்பு மற்றும் குடும்ப நிலையால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார் அவர்.

டெல்லி போலிஸ்
டெல்லி போலிஸ்

ஆறு மாதங்களாக உறவினர்களின் பண உதவியால் மட்டுமே குடும்பம் நடத்திவந்துள்ளனர். அவர், மன அழுத்தம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில்தான் கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்துள்ளன. அவரது மனைவி மிகுந்த துக்கத்தில் உள்ளார். நாங்கள் சந்தேகித்தது உண்மையா என்பது அவர் பேசினால் மட்டுமே தெரியவரும். இப்போது அவரிடம் பேச முடியாத நிலை உள்ளது. மேலும், தற்கொலை செய்துகொண்ட நபர் சிகிச்சை பெற்றதற்கான எந்த ஆவணங்களும் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்” என்று கூறியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு