Published:Updated:

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை! - 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

கோர்ட் தீர்ப்பு

பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தது நீதிமன்றம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் (20). இவர், அதே பகுதியில், கண்மாய் அருகே ஆடு மேய்க்கச் சென்ற 45 வயது பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுரேந்தரைக் கைதுசெய்தனர்.

ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை! - 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த மகிளா நீதிமன்றம்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்த வழக்கு, புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, "பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சுரேந்தருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுரேந்தர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism