Published:Updated:

பெண் கவுன்சிலரை தாக்கிய போலீசார்:டெல்லியில் பரபரப்பு!

Vikatan Correspondent
பெண் கவுன்சிலரை  தாக்கிய போலீசார்:டெல்லியில் பரபரப்பு!
பெண் கவுன்சிலரை தாக்கிய போலீசார்:டெல்லியில் பரபரப்பு!
பெண் கவுன்சிலரை  தாக்கிய போலீசார்:டெல்லியில் பரபரப்பு!

புதுடெல்லி: பெண் கவுன்சிலரை அடித்து போலீசார் இழுத்துச் சென்றதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லி அருகே அடித்தட்டு மக்கள் வசிக்கும்  குடிசைப் பகுதி ஒன்று உள்ளது. அங்கு வசித்து வரும் குடிசை வாசிகளின் குடியிருப்புகளை அகற்றும் பணியில் நகர அபிவிருத்தி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கவுன்சிலர் நிஷா சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த குர்கான் போலீசார் நிஷா சிங்கை தலையை பிடித்து அடித்து உதைத்து இழுத்து சென்றனர்.
அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து நிஷாவின் உறவினர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர். நிஷா போலீசாரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

போலீசாரால் தாக்கபட்ட நிஷா சிங் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர் ஆவார். அரசியலில் ஈடுபாடு காரணமாக வேலையை உதறிவிட்டு ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்  கொண்டார். நிஷா சிங் லண்டன் பொருளாதார பள்ளியில் பட்டம் பயின்ற அவர், கடந்த ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது.