Published:Updated:

கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!
கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கூத்தங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: பதற்றத்தால் போலீஸ் குவிப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் கூத்தங்குழி கிராமத்தில் மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

கூத்தங்குழி மீனவ கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே அடிக்கடி கோஷ்டி மோதல் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த மோதலின்போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு, பொதுமக்களை அச்சமடைய செய்வதும் வழக்கமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 10க்கும் மேற்பட்ட முறை இந்த கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. அவ்வப்போது போலீசாரும் இந்த கிராமத்தில் சோதனை நடத்தி,  நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அருளப்பன் என்பவரின் மகள் லூசியாவுக்கு கடந்த 7 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது, சரண் மற்றும் ரோட்ரிகோ குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது. இது மோதலாக வெடித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுபற்றி அறிந்த காவல் துறையினர், டி.எஸ்.பி, பாலாஜி தலைமையில் அந்த கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், இரு குழுவினரும் சமாதானம் அடையாமல் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.

இந்த சூழலில், இன்று அதிகாலை 3 மணியளவில் கூத்தங்குழி கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதன் பின்னர் காலை 6 மணியளவில் மீண்டும் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டு வெடித்து சிதறியதால் ஒட்டு மொத்த கிராமத்தினரும் அச்சம் அடைந்தனர். சில வீடுகளின் மேல் வீசப்பட்ட வெடிகுண்டுகளால் கட்டடங்கள் சேதம் அடைந்தன. வினோ என்பவர் உள்ளிட்ட சிலர் காயம் அடைந்ததாகவும், அவர்கள் இடிந்தகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், நெல்லை மாவட்ட காவல் துறையினர் கூத்தங்குழி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதுவரை 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இவர்களில் சிலுவை சித்தேரி, வெனிசுலா, சில்லாரி, ராஜன், லாரன்ஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

-ஆண்டனி ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு