Published:Updated:

20 தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆந்திர அரசு

20 தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆந்திர அரசு
20 தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆந்திர அரசு

20 தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆந்திர அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹைதராபாத்: 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி கடந்த மே மாதம் 7ஆம் தேதி 20 தமிழர்களை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். தமிழகம் மட்டுமின்றி நாட்டையே இந்த என்கவுன்டர் உலுக்கியது.

20 தமிழர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆந்திர அரசு

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக் கோரி, ஆந்திர மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆந்திர உள்துறை முதன்மைச் செயலாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''ஆந்திர மக்கள் உரிமைக் கழகம் உண்மைகளை சரிபார்க்காமல், அவசரமாக பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி செம்மரக் கடத்தல் தடுப்பு படையினர் வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள், காவல்துறையினர் மீது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, செம்மரக் கடத்தல் தடுப்பு படையினர் தற்காப்புக்காக முதலில் வானத்தை நோக்கி சுட்டனர். ஆனால், அது பயனளிக்காததல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

ஆனால், அவர்கள் தனி இடத்தில் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அதேபோல், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் புகாரும், உடல் பரிசோதனை அறிக்கையை திருத்தி எழுதியுள்ளதாக கூறப்படும் புகாரம் ஆதாரமற்றவை. உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களும் கடைபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பில் பணியாற்றிய காவல்துறை ஐ.ஜி. ரவி சங்கர் அய்யனார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவுக்கு ஆந்திர உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடப்பதால் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை'' எனக் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு