கண்ணீர் பெருக்கு!

அன்று ஊருக்கெல்லாம் ஆடிப்பெருக்கு... ஆனால், அந்தக் குடும்பத்துக்கோ கண்ணீர்ப் பெருக்கு!

அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமம் ராமசாமி நகரிலுள்ள தமிழ்ச்செல்வி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடை-பாயசம் எல்லாம் பண்ணினார். தன் செல்லக் குழந்தைகள் 8 வயதான சந்துரு, ஐந்து வயதான சந்தியா, மாமியார் அனைவருக்கும் இலையைப் போட்டுத் தானும் உட்கார்ந்து சாப்பிட்டார்.

'அப்பாவுக்கு போன் போடும்மா...' என குழந்தைகள் கேட்க, மதியம் 2 மணிக்கு துபாயில் இருக்கும் கணவர் சரவணனுக்கு போன் போட்டார் தமிழ்ச்செல்வி. நலம்

விசாரித்துக் கொண்டிருக்கும்போதே போனைப் பிடுங்கிய சந்துரு, ''அப்பா, நாங்க வடை-பாயசம் சாப்பிட்டமே, நீ சாப்ட்டியா?'' என கேட்க, போட்டிக்கு போனை வாங்கிய சந்தியா,

''அப்பா, நாங்க நல்லா இருக்கோம். நீ எப்ப வருவே?'' என்றாள் கீச்சுக் குரலில்.

குழந்தைகளுக்கு சமாதானம் சொல்லி, முத்தமழை பொழிந்து, ''நல்லா சாப்ட் டாச்சுல்ல, தூங்குங்க...'' என பாசம் காட்டி, எதிர்முனையை வைத்தார் சரவணன்.

ஆனால், சுவை யாய் சாப்பிட்டு முடித்த சந்துரு வும் தங்கை சந்தியாவும் அப்பா சொன்னதையும் கேட்காமல் அம்மாவின் செல்ல அதட்டலையும் பொருட்படுத்தாமல் விளை யாடப் போய்விட்டனர். வீட்டு வேலைகளில் கவனம் செலுத்திய தமிழ்ச்செல்வி திரும்பி தெருவில் வந்து பார்த்தால் இரண்டு வால் களையும் காணோம்.

தமிழ்ச்செல்வியும் பாட்டி செல்லம் மாளும் குழந்தைகளைத் தேட ஆரம்பித்தனர்.

அக்கம் பக்க வீடுகளில் இல்லை, ஊரெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை.

மாலை 5.30-க்குத்தான் அந்த இடி தாக்கியது!

வீட்டின் பின்புறத்தில், அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கத்துக்காகத் தோண்டப்பட்ட பத்து அடி ஆழக் குழியில் மழைத் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அந்தக் குழிக்குள் விளை யாடப் போன சந்துருவும், சந்தியாவும் சவங்களாக மிதந்தனர்.

இரண்டு பிஞ்சுகளின் இழப்பால் செந்துறையே சோகத்தில் உறைந்துவிட்டது. தகவல் கிடைத்ததும் கதறி அழுதபடியே பறந்து வந்துவிட்டார் சரவணன்.

''நேத்து, 'நாங்க நல்லாயிருக்கோம், நீ நல்லாயிருப்பா'னு சொன்னீங்களே! இன்னைக்கு நேர்ல வந்திருக்கேன். எதுவுமே பேசாம படுத்திருக்கீங்களே!'' -தன் செல்வங்களைத் தொலைத்து நிற்கும் அந்த அப்பாவுக்கு யாரும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.

''புள்ளைகள ஊரெல்லாம் தேடினோம். ஆனா, அந்தக் குழிய பாக்கலியே. அப்பவே பாதுகாப்புக்கு வேலி போடுங்கன்னு அடிச்சுக்கிட்டோம். வேலி போட்டிருந்தா, என் புள்ளைங்க செத்துருக்காதே. அநியாயமா என் புள்ளைங்கள கொன்னுப்புட்டாங்களே...'' என கதறினார் தமிழ்ச்செல்வி.

நம்மிடம் பேசிய வளம்பரி என்பவர்,

''இங்க ஆஸ்பத்திரி கட்டுறதுக்கு வேலை தொடங்கியதுமே, 'இது புள்ளைங்க பள்ளிக் கூடத்துக்குப் போற வழியாச்சே. முதல்ல காம்பவுன்ட் சுவர் கட்டுங்க. அப்புறம் வேலையை ஆரம்பிக்கலாம்'னு சொன்னோம், அவங்க அதைக் காதுலயே வாங்காம வேலையை ஆரம்பிச்சு, அநியாயமா ரெண்டு உயிரைப் பறிச்சுட்டாங்க. இந்த வழியா தெனம் நூறு, இருநூறு பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் போய்வருதுங்க. இனிமேலயாச்சும் அலட்சியம் காட்டாம கவனிக்கவேண்டியவங்க கவனிக்கணும்'' என்றார்.

அரசுக் கட்டடப் பணிகளை கவனிக்கும் பொதுப்பணித்துறையின் உதவிப் பொறியாளர் (கட்டட வடிவமைப்பு கட்டடப் புதுப்பிப்பு) ரவிச்சந்திரனிடம் இந்த அலட்சிய சோகத்தைக் கூறி விளக்கம் கேட்டோம்.

''வேலியில்லாம பிரச் னையாதான் சார் இருக்கு. எம்.எல்.ஏ-வான ஆண்டிமடம் சிவசங்கர்கிட்டகூட இது சம்பந் தமா பேசியிருக்கேன். இன்னும் ரெண்டு நாள்ல, பாதுகாப்பு வேலி போட்டுருவோம். அந்தக் குடும்பத்துக்கு நியாயமா என்ன செய்யணுமோ அதை செய்யத் தயார்'' என்றார்.

'கடல் கன்ஸ்ட்ரக்ஷன்' என்ற நிறுவனம்தான் குழி வெட்டும் கான்ட்ராக்ட்டை எடுத்துப் பணியைச் செய் திருந்தது. அதன் ஓனர் ஈரோட்டைச் சேர்ந்தவர்.

அரியலூர் ஜி.ஹெச்-சிலும் அவர் கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறாராம். இந்தத் தகவல் கிடைத்ததும் அரியலூர் ஜி.ஹெச்-சுக்குச் சென்றோம். அங்கே ஃபீல்டு சூப்பர்வைஸர் சதீஷ்குமார்தான் இருந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்யாருக்கோ போன்போட்டுப் பேசினார். பின்பு,

''ஓனர் வெளியூர்ல இருக்காங்க சார். அரியலூர் மாவட்டத்தில் ரெண்டு ஹெல்த் புராஜெக்ட் எடுத்து வேலையைத் தொடங்கினோம். செந்துறையில 20 நாளைக்கு முன்னால தொடங்கினோம். மழை வந்துச்சு, ஆடிப்பெருக்குத் திருவிழா வந்ததால, நாங்க சொந்த ஊருக்குப் போயிட்டோம். அந்தக் குழந்தைங்க குழிக்குள்ள விழுந்து இறந்துடுச்சுனு தெரிஞ்சதும் மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு சார்'' என்றார்.

குழி தோண்டி அலட்சியமாக விட்டுவிட்ட தால், அதுவே இரண்டு பிஞ்சுகளின் மரணக் குழியாகியிருக்கிறது. அந்த வழியே பள்ளிக்குப் போகும் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும், ஜடமாகிக் கிடக்கும் அரசு இயந்திரம்!

- சி.ஆனந்த குமார்