பையில காசு... கையில ரிசல்ட்!

''நல்ல விஷயங்களை மக்களுக்குப் போதிக்கவேண்டிய பேராயர் ஒருவரே கோர்ட் உத்தரவை மீறியிருக்கிறார். அதற்கு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் துணை போயிருக்கிறது'' - இப்படியரு அதிரடிப் புகாரோடு நம்மைச் சந்தித்தார், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் உறுப்பினரான செல்வராஜ்.

நாசரேத் டயோசிஸன் கட்டுப்பாட்டில் கடந்த 2006-07-ல் தூத்துக்குடி மாவட்டம்

சாயர்புரத்தில் ஜி.யு.போப் பி.எட். கல்லூரியும், சாத்தான்குளத்தில் பி.எஸ்.கே.ராஜரத்னம் நினைவு பி.எட். கல்லூரியும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. கல்லூரிக்கு 100 பேர் வீதம் இரண்டு கல்லூரியிலும் 200 பேருக்கு அட்மிஷனும் நடந்தது. எல்லாம் முடிந்து தேர்வு எழுதப்போன நேரத்தில்தான் அந்தக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாத விஷயமே மாணவ-மாணவியருக்கு தெரிய வந்திருக்கிறது. உரிய அனுமதி பெறாமல் கல்லூரிகளை ஆரம்பித்ததாகவும் கல்வி யாண்டின் தொடக்கத்தை விட்டு விட்டு தாமதமாகக் கல்லூரிகளை ஆரம்பித்ததா கவும் குறைசொல்லி, தேர்வு எழுத அனும திக்க மறுத்துவிட்டார் மனோன்மணீயம் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் சிந்தியா பாண்டியன்.

இதை எதிர்த்து கல்லூரிகள் தரப்பிலிருந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அதில் பல்கலைக்கழகத்தின் வாதமாக, 'நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பி.எட். கல்லூரி சார்பில் தொடரப்பட்ட இதே போன்றதொரு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற ஃபுல் பெஞ்ச் விசாரணையில் நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பைப் பொறுத்துத்தான் இந்த வழக்கிலும் முடிவெடுக்க

வேண்டும்' என்று சொல்லப்பட்டது. கல்லூரிகள் தரப்பிலோ, 'சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும், அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால், இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டிய மாணவ-மாணவியர் தேர்வு எழுத நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்று வாதிடப்பட்டது. முடிவில் கல்லூரிகள் தரப்பில் போடப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த நீதி பதிகள், மாணவ-மாணவியரின் நலன் கருதி, 'கடையநல்லூர் கல்லூரி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை இங்கும் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது; சான்றிதழ்களை வழங்கக்கூடாது...' என்கிற நிபந்தனைகளுடன் தேர்வு எழுத அனுமதி வழங்கினார்கள்.

கோர்ட்டின் இந்த உத்தரவைத்தான் பேராயரும் பல்கலைக்கழகமும் மீறிவிட்டதாகப் பாய்கிறார் செல்வராஜ்.

''கடையநல்லூர் காலேஜ் வழக்கைக் கடந்த 6.10.2007-ல் தள்ளுபடி செஞ்ச சென்னை ஹைகோர்ட், கல்லூரிக்குப் பாதகமாத்தான் தீர்ப்பு சொல்லிச்சு. அந்தத் தீர்ப்பு நாசரேத் டயோசிஸன் காலேஜ்களுக்கும் பொருந்தும்ங்கிறதால மேற்கொண்டு என்ன செய்யுற துன்னு தெரியாம அந்தக் கல்லூரி நிர்வாகங்கள் திணறிப்போச்சு. ஆனா, டொனேஷன் குடுத்துப் படிச்ச ஸ்டூடன்ட்ஸ் கிடுக்கிப்பிடி போட்டுட்டாங்க. அதனால அவங்ககிட்ட வசூலிச்ச பணத்திலேயே சில லட்சங்களை செலவு செஞ்சு கடந்த ஜூன் மாசம் கோர்ட் உத்தரவையும் மீறி ரிசல்ட்டை வெளியிட வச்சு சான்றிதழும் குடுக்க வச்சுட்டாங்க.

இதுக்காக டயோசிஸன் செலவழித்த பணத்தில் துணைவேந்தர் சபாபதி மோகனுக்கும் சில அரசியல் புள்ளிகளுக்கும் பங்கு போயிருக்கிறதாச் சொல்றாங்க. கல்லூரி

நிர்வாகங்களின் இந்த கீழ்த்தரமான செயல் பாட்டைக் கண்டிக்காம அவர்களுக்கு டயோசிஸன் பேராயர் ஜெபச்சந்திரனும் உடந்தையா இருந்திருப்பதுதான் வேதனையா இருக்கு. கோர்ட் உத்தரவை மீறி சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டிருக்கிற விஷயம் இப்ப ஸ்டூடன்ட்ஸ§க்குத் தெரிஞ்சுருச்சு. 'நம்ம படிச்ச படிப்பு செல்லுமா செல்லாதா...'னு அவங்களும் இப்ப குழம்பிக் கிடக்குறாங்க. இப்படியரு கேவலமான காரியத்தைச் செஞ்சவங்க மேல நீதித்துறையும் கல்வித்துறையும் கடுமையா நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று பொரிந்து தள்ளினார் செல்வராஜ்.

பேராயர் ஜெபச்சந்திரனிடம் கேட்டபோது, ''அவரு சொல்ற மாதிரி யாரும் இஷ்டப்படி டயோசிஸன் பணத்தை எடுத்துட முடியாது. கோர்ட் உத்தரவு இருந்தாலும், அந்த ஏழை மாணவ-மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படும்ங்கிறதை எடுத்துச்சொல்லி துணைவேந்தர் சபாபதி மோகனிடம் வேண்டுகோள் வைத்தோம். நன்கொடை வாங்காமல் சேவை மனதோடு நடத்தப்பட்ட இந்தக் கல்லூரிகளின் நோக்கம் வீணா கிடக் கூடாதுன்னும் கேட்டுக்கிட்டோம். முந்தைய துணைவேந்தர்

சிந்தியா பாண்டியன்கூட ஏற்கெனவே இதேபோல் இக்கட்டிலிருந்த கல்லூரிகளில் படித்த மாணவர்களின் நலன் கருதி ரிசல்ட்டை வெளியிட்டு உதவி செய்திருக்கிறார் என்பதையும் சொன்னோம். இதையெல்லாம் கேட்டு நீண்ட யோசனைக்குப் பிறகு தான் கருணை அடிப்படையில் இந்த ரிசல்ட்டை வெளியிட அவர் ஒப்புக் கொண்டார். மற்றபடி, ரிசல்ட் வெளியிடப் பணம் கொடுத்ததாகச் சொல்றதெல்லாம் அபாண்டம்'' என்று வருத்தப்பட்டார்.

துணைவேந்தர் சபாபதி மோக னிடம் பேசினோம். ''கோர்ட் உத்தரவு இருந்தாலும் அந்தக் கல்லூரிக்கு 'அஃப்ளியேஷன்' கிடைக்கும் பட்சத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையில்கூட இந்த ரிசல்ட் அறிவிக்கப்பட்டிருக்கலாம். எனி னும், இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எனக்கு முன்பிருந்த துணைவேந்தரின் கையெழுத்தோடுதான் அந்தத் தேர்வு முடிவுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருக்கு. அதனால் அவரிடம்தான் இதுபற்றி கேட்க வேண்டும்'' என்றவர், ''இந்த விஷயத்துக்காக நான் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. டயோசிஸன் நிர்வாகத்தின் உள்விவகார சண்டைகளில் என்மீதும் இப்படி வீண்பழி போடப்பார்க்கிறார்கள் போலிருக்கிறது'' என்றார்.

முன்னாள் துணைவேந்தர் சிந்தியா பாண்டியனோ, ''நான் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றேன். அதுவரை நீங்கள் குறிப்பிடும் வகையிலான எந்த ரிசல்ட்டையும் வெளியிட அனுமதி கொடுத்ததாகவோ அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டதாகவோ எனக்கு நினைவில்லை'' என்றார்.

நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிந்தாலும், ஆளாளுக்கு ஏனோ அதை மறைக்கப் பார்க்கிறார்கள். 'கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெரு வுக்கு வரத்தானே வேண்டும்' என்பது அவர்களுக்கும் தெரியாதா என்ன!

- எஸ்.ராஜாசெல்லம்