கருப்பசாமி

ஆவண குத்தகைதாரர்!

ஆளும்கட்சி, எதிர்க்கட்சியினர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடுவது தமிழகத்தில் வாடிக்கை யான விஷயம்தான். ஆனால், ''முதல்வர் கருணாநிதி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் போடுவேன். அதற்கான ஆதாரங்களை சேகரித்து விட்டேன். எங்கள் அம்மாவின் ஒப்புதலுக்காகத்தான் காத்திருக்கிறேன்'' என்று ஆவேசமாய் சீறிக் கொண்டிருக்கிறார், அ.தி.மு.க-வின் முன் னாள் அமைச்சரான கருப்பசாமி. இவர் சங்கரன்கோயில் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் கூட.

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட இளை ஞர், இளம் பெண்கள்

பாசறைப் பொறுப்பாளராக அ.தி.மு.க. தலை மையால் அறிவிக்கப் பட்டிருக்கும் கருப்பசாமி, திடீரென்று இப்படி ஆவேச சாமியாகி இருப்பதன் காரணத்தை அவரிடமே கேட்டோம். கிராமத்துக்கே உரிய வெள்ளந்தி சிரிப்போடு பேசத் தொடங்கினார் கருப்பசாமி.

''கருணாநிதியும் அவரோட குடும்பமும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து குவிச்சிருக் கறது நாடறிஞ்ச விஷயம். ஆசிய அளவுல கோடீஸ்வரக் குடும்பமாக கருணாநிதியின் குடும்பம் இருக்கு. அது தமிழகத்தையே மொட்டை யடிச்சுட்டுதான் ஓயும் போல. கருணாநிதியின் வரம்பு மீறிய சொத்துக் குவிப்பை மக்களிடம் அம்பலமாக்க நினைச்சு, அதுக்கான ஆதாரங்களைத் தேட ஆக்ஷனில் எறங்கினேன். எப்போதும் போல பஸ்சுலயே திருவாரூருக்குப் போனேன். அங்கருந்து கருணாநிதியோட சொந்த ஊரான திருக்குவளைக்குப் போனேன். முதல்வர் பொறந்த ஊருலயே ஒரு முன்னேத்தத்தையும் காணோம். ஏழை மக்களுக்கு வீட்டுமனைகூட வழங்கப்படலை. ஏரிக்கரையோரம் ஓட்டைக் குடிசைகள்ல மக்கள் வசிக்கிற நெலமையப் பாக்க சகிக்கலை. ஆனா, சாதாரண எம்.எல்.ஏ-வா இருக்குற என்னோட சொந்த ஊரு களப்பாகுளம் பஞ்சாயத்து புளியம்பட்டி கிராமத்துல ஒரு கூரை வீடுகூட கெடையாது. சாதாரண மனுஷனான நானே, என்னோட முயற்சியால கிராமத்தை மேம்படுத்தி வெச்சிருக்கேன். ஆனா, பல தடவை முதலமைச்சரா இருக்குற கருணாநிதி அவரோட சொந்த ஊரையே நொந்த ஊராதான் வச்சிக்கிட்டு இருக்காரு. இப்படிப்பட்டவர்தான் தமிழ்நாடு முழுக்க நல்லது செய்யப் போறாராக்கும்?'' என ஆவேசமாக பேசத் தொடங்கிய கருப்பசாமி நாம் எதிர்ப்பார்த்த விஷயத்துக்கு வந்தார்.

''16.1.1946-ல் திருவாரூரில் இருக்குற 'கமலாம்பிகா கோ ஆபரேட்டிவ்' சொஸைட்டியில பங்குதாரரா சேந்துக்க கருணாநிதி கொடுத்த விவரங்களைப் பத்தி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கேன். அந்த ஆவணத்தை எப்படியாவது

வாங்கிடணும்னுதான் திருக்குவளைக்கே போனேன். மூணு நாள்லயே எனக்கு அதுக்கான பலன் கிடைச்சுடுச்சு. கமலாம்பிகா கோ ஆப்ரேட்டிவ் சொஸைட்டியில் பங்குதாரரா சேர, பெயர்எம்.கருணாநிதி, பெற்றோர் முத்துவேல் - பத்மாவதி, பணி குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியர், மாத வருமானம் ரூ 50, சாதி இசை வேளாளர்'னு இப்படித் தகவல் கொடுத்துருக்குற கருணாநிதி கையெழுத்தை மட்டும் இங்கிலீஷ்ல போட்டிருக்கார். 1946-ல் மாத வருமானம்னு ஐம்பது ரூபாய்னு குறிப்பிட்டிருக்கிற கருணாநிதி, இன்றைக்கு இத்தனை கோடி சொத்துக்களை சேத்து வெச்சிருக்கிறது எப்படி? அந்த ஆவணத்தில நஞ்சை, புஞ்சை, வீட்டுமனை எதுவும் தனக்கு இல்லைனு சொல்லி இருக்கும் கருணாநிதிக்குத்தான் இப்ப இத்தனை கோடி சொத்துக்கள்... அவர் மகள் கனிமொழி ராஜ்யசபா எம்.பி-யானப்ப அவரோட சொத்துப் பட்டியலை அறிவித்தார். அதில் ஆறு கோடியே 40 லட்ச ரூபாய் இந்தியன் வங்கியில் பிக்ஸட் டெபாசிட்டா இருக்கிற தாவும் எஸ்.பி. அக்கௌன்ட்டில் 18 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் இருக்கிறதாவும் 360 கிராம் தங்க நகையும் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரும், அண்ணா சாலையில் ஒரு கோடியே 61 லட்சம் மதிப்புள்ள கட்டடமும் இருக்கிறதாவும் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் கருணாநிதி தன் மகளுக்கு கொடுத்த சொத்துக்களாகத்தான் இருக்க முடியும். கனிமொழிக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களே இத்தனை கோடின்னா மொத்த குடும்பத்துக்கும் எவ்வளவு இருக்கும்? இதுபோல நிறைய ஆவணங்கள் வெச்சிருக்கேன். அதெல்லாம் வெச்சு கருணாநிதியை கோர்ட்டுக்கு இழுப்பேன்... மக்கள் மன்றத்தில் கருணாநிதி இதுக்கெல்லாம் என்ன பதில் சொல்றார் எனப் பாப்போம்'' என்றார் கருப்பசாமி.

இந்த ஆவண விவகாரம் குறித்து தி.மு.க. எம்.பி-யும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயனிடம் கேட்டோம்.

''காமாலைக்கண்ணன் பார்வையில் குறிஞ்சி மலரும் அசிங்கமாகத்தான் தெரியும். திருக்குவளைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திருவாரூர்-நாகை மாவட்டங்களுக்கும் தலைவர் கலைஞர் செய்திருக்கும் வியக்கத்தக்க பணிகள் பற்றி கருப்பசாமிக்கு

என்ன தெரியும்? தலைவரைப் பற்றி அவதூறு பேசுவதற்கு முன் தனக்கு அதற்குத் தகுதி இருக்கிறதா என அவர் யோசித்திருக்கவேண்டும். அவர் பேசுவதை இனியும் பொறுக்க முடியாது. திருக்குவளைக்கு ரகசியமாக வந்தாகச் சொல்லும் கருப்பசாமி, இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் களப்பால் கிராமத் துக்குப் போய் வந்திருக்கலாமே? உயிர்த்தோழி சசிகலாவின் சொந்த ஊரான அங்கு போய் விசாரித்து அவருடைய ஆரம்ப கால வசதி வாய்ப்புகளை கணக்கிட்டு சென்றிருக்கலாமே! கலைஞரின் படிப்படி யான முன்னேற்றங்களுக்கு முறையான ஆதாரங்கள் இருக்கின்றன. இனியும் அவர் இதேபோல் பேசினால் உயிர்த்தோழியைப் பற்றிய அத்தனை சேகரிப்புகளையும் அடுக்கடுக்காக சொல்லவேண்டி இருக்கும்... அதோடு, தற்போது கருப்பசாமி ஏதோ புதிய கண்டுபிடிப்பாக சொல்லியிருக்கும் ஆவணம், ஏற்கெனவே அ.தி.மு.க-வின் 'நமது எம்.ஜி.ஆர்.' பத்திரிகையில் வந்ததுதான்!'' என்று ஆவேசமாகச் சொன்னார் விஜயன்.

இதற்கிடையில், ''சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற விவாதத்தின் போது கருப்பசாமி கேட்ட ஒரு கேள்வி முதல்வரின் மனதை பெரிய அளவில் காயப்படுத்தி விட்டது. அன்றிலிருந்தே கருப்பசாமிக்கு எதிரான வேலைகளும்

தொடங்கி விட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது காலாவதியான ஒரு சொஸைட்டிக்கு சிபாரிசு செய்த தாகவும் அதில் முறைகேடுகள் இருப்பதாகவும் சொல்லி இப்போது கருப்பசாமி மீது புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விஜிலன்ஸ் அதிகாரிகள் அதுபற்றி கருப்பசாமியிடம் விசாரணை நடத்தி குடைகிறார்கள். இதற்குப் பதிலடியாகத்தான் கருப்பசாமி முதல்வருக்கு குடைச்சலை கொடுக்கும் வேலையில் இறங்கி விட்டார். காலாவதியான சொஸைட்டிகளுக்கு ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் வேலையைக் கொடுக்க கருப்பசாமி சிபாரிசு செய்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை...'' என்கிறார்கள் விவரமறிந்த வேறு சிலர்.

இதுகுறித்து மறுபடியும் கருப்ப சாமியிடம் கேட்டோம். ''அந்த விவகாரத்தில் என் மீது எந்தத் தவறும் இல்லை. விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை முடிவில், நான் தவறு செய்திருப்பதாக நிரூபித்தால், என் அரசியல் வாழ்வையே தலை முழுகி விடுகிறேன்'' என சவால் விட்டார் கருப்பசாமி

- இரா. சரவணன்