வீரப்பன் பொருள் காட்சி!

முழுக்க முழுக்க சந்தன வீரப்பன் சமாசாரங்களைமட்டுமே காட்சிப் பொருட்களாக வைத்து அதிரடியாக ஒரு அரங்கம் அமைத்திருக்கிறது தமிழக காவல்துறை. இந்த அரங்கம் அமைந் திருக்கும் அரசு பொருட்காட்சியை, செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி சமீபத்தில் சேலத்தில் திறந்து வைத்திருக்கிறார்!

வீரப்பனை எப்படி அதிரடிப்படையினர் சுட்டனர் என்பதை விளக்கும் மாதிரி வரைபடத்தையும் அந்த அரங்கில் வைத்திருக் கிறார்கள். ('சுடுவதற்கு முன்பே தயாரிக்கப்பட்டதோ..?' என்று பார்வையாளர்கள் கிண்டலாகப் பேசிக்கொண்டார்கள்!)

'வீரப்பன் பயன்படுத்திய பொருட்கள். தயவுசெய்து தொடாதீர்கள்!' என்ற

வாசகத்துடன் கண்ணாடிப் பேழைக்குள், வீரப்பன் கூடாரம் அமைக்கப் பயன் படுத்திய தார்ப்பாய், போர்வை, ஒரு புளூ கலர் பீட்டர் இங்லாண்ட் சட்டை, மிலிட்டரி காக்கி நிறத்தில் இரண்டு பேக்குகள், மருந்துகளை எடுத்துச் செல்ல ஒரு பேக் என ஏகப்பட்ட பொருட்களைப் பார்க்க முடிந்தது.

இது மட்டுமா..?

மினி சைஸ் ரெக்கார்டிங் டேப், அதற்குப் பயன்படுத்தும் கேசட்கள், கோத்ரேஜ் ஹேர் டை, ஒரு பித்தளைப் பாத்திரம், டீ வடிகட்டி, அன்னபூர்ணா ரசப்பொடி, ஜில்லெட் ஷேவிங் ரேசர், சிட்டிசன் ரிஸ்ட் வாட்ச், லேட்டஸ்ட் உலக மேப் மற்றும் கர்நாடக மாநில மேப், மூன்றடி நீளத்துக்கு மூன்று கத்திகள், ஒரு கோடாரி... இப்படி சின்னச்சின்னப் பொருட்களையெல்லாம் சேகரித்திருக்கும் போலீஸ், வீரப்பன் கடைசியாகப் பயன்படுத்திய தீப்பெட்டியைக்கூடப் பார்வைக்கு வைக்கத் தவறவில்லை.

அரசு பொருட்காட்சியின் பொறுப்பாளரான மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மனோகரனிடம் பேசினோம்.

''ஒவ்வொரு அரசுத்துறையும் தங்கள் சாதனைகளை விளக்க தனித்தனியாக

அரங்குகள் அமைச்சாங்க. காவல்துறையும் தங்களோட சாதனைகளை விளக்க அமைச்சிருக்கிற அரங்கில்தான் வீரப்பன் பயன்படுத்தின பொருட்கள் வைக்கப்பட்டிருக்கு. இரண்டு மாநில அரசுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்த வீரப்பனைச் சுட்டு வீழ்த்தியது தமிழக காவல்துறை வரலாற்றில் ஒரு கம்பீரமான சாதனைதானே..! அதனால அந்த சாதனைகளை விளக்கற மாதிரி அமைச்சிருக்காங்க. வீரப்பனைப் பார்க்கணுங்கற ஆசை பலருக்கும் இருந்திருக்கலாம். அதனால, அவன் பயன்படுத்திய பொருட்களைப் பொதுமக்கள்பார்வைக்கு வச்சா நல்லா இருக்கும்னு அரசின் அனுமதி
யோட இதைச் செஞ்சிருக்காங்க. எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் பொருட்காட்சிக்கு கூட்டம் அதிகம் வருது. வீரப்பன் பயன்படுத்திய பொருட்களைப் பார்க்க பொதுமக்கள் ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க..!'' என்றார்.

''உங்க வீட்டுக்காரர் பயன்படுத்தின பொருட்களைப் பொருட்காட்சியில வச்சிருக்காங்களே, நீங்க பார்த்தீங்களா..?'' என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி யிடம் கேட்டோம்.

''பார்த்துட்டு வந்தவங்க என்கிட்ட சொன்னாங்க. நான் இன்னும் பார்க் கல. செத்தவங்களோட பொருட்களை அவனுடைய குடும்பத்துக்கிட்ட தான் ஒப்படைக்கணும். ஆனா, எங்க வீட்டுக்காரர் பயன்படுத்தின பொருட்களை போலீஸ் என்கிட்ட ஒப்படைக்கவே இல்ல. ஊரு ஊராக்கொண்டு போய் வித்தை காட்டுறவங்க மாதிரி காட்டிட்டு இருக்காங்க. எல்லாத்தையும் வச்சவங்க அவரு வச்சிருந்த துப்பாக்கியையும் வைக்கவேண்டியதுதானே... ஏன் அதை
மட்டும் வைக்காம விட்டாங்க..?

எங்க வீட்டுக்காரரை எப்படி சுட்டுக் கொன்னோம்னு ஏதோ பொம்மை வேற செஞ்சி வச்சிருக்காங்களாம். அவரை உண்மையிலேயே நேருக்கு நேரா நின்னு சண்டை போட்டுப் பிடிச்சிருந்தா போலீஸை பாராட்டியிருப்பேன். ஆனா, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்க வெச்சுத்தானே அந்தக் கோழைங்க அவரை பிடிச்சாங்க. இன்னைக்கு ஏதோ பெருசா சாதிச்சுக் கிழிச்
சிட்ட மாதிரி பொருட்காட்சியில அதையெல் லாம் விளக்குறாங்களாம்.

இப்பவும் பொருட்காட்சிக்கு வர்றவங்க எங்க வீட்டுக்காரர் பயன்படுத்தினபொருட்களைப் பார்த்துத் தொட்டுக் கும்பிட்டுத்தான் போறாங்களாம்.

அப்படின்னா, அவரு மேல ஜனங்க எம்புட்டு மரியாதை வச்சிருக்காங்கன்னு பார்த்துக்குங்க. எங்க வீட்டுக்காரர் பயன்படுத்திய பொருட்களை அரசு என்கிட்ட உடனடியாக ஒப்படைக்கணும். இல்லன்னா நான் வழக்குத் தொடருவேன்'' என்று கொதித்தார்.

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் வன்னியப் பெருமாளிடம் பேசினோம்.

''இந்தப் பொருட்கள் எல்லாம் தமிழக அரசால் எங்களுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசோட உத்தரவுப்படிதான் இவற்றைப் பொருட்காட்சியில வச்சிருக்கோம். இனி, எல்லா மாவட்டத்துல நடக்கற பொருட்காட்சிக்கும் இந்தப் பொருட்களை அனுப்பி வைக்கத் திட்டம் போட்டிருக்காங்க. குற்றவாளி பயன்படுத்தின பொருட்களை அவனுடைய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்களுக்கு நேரடியாக வழங்க எங்களுக்கு அதிகாரம் கிடையாது. அவர்களுக்கு அந்தப் பொருட்கள் தேவைப்பட்டால் முறைப்படி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துதான் பெறவேண்டும்'' என்றார்.

வீரப்பனே போய்விட்டாலும், சர்ச்சைகள் விடாது போலிருக்கே!

- கே.ராஜாதிருவேங்கடம்
படங்கள் க.தனசேகரன்