ஒரு அவசரக் கேள்வி...

புலிகளா? போலிகளா?

சார்க் மாநாட்டுக்காக இடைவேளை விட்டிருந்த யுத்தம், இலங்கையில் மீண்டும் வேகம் பிடித் துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ச்சி யாக விடுதலைப்புலி இயக்கம் தொடர்புடையவர்கள் பிடிபட்டு வருவது, காவல்துறை வட்டாரத்தையே கலக்கமடைய வைத்திருக்கிறது!

கடந்த ஜூலை கடைசி வாரத்தில் சென்னையில் பதுங்கி இருந்த புலிகளின் கொள்முதல் பிரிவைச் சேர்ந்த தம்பி அண்ணா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜூலை 28-ம் தேதி மாலை ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கடற்கரைச்

சாலையில் மாருதி வேனில் வந்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் நவீன், ரமணன், விக்னேஷ்நாதன், சிவராம் ஆகியோர் போலீஸிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து ஜெனரேட்டர் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

நவீன், பதின்மூன்று வயதிலேயே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். 2006-ம் ஆண்டு அகதியாக ராமேஸ்வரம் வந்தவர், மதுரை அரு கேயுள்ள திருவாதவூர் முகாமில் தங்கியிருந்தார்.

மதுரை உச்சப்பட்டி முகாமிலிருந்த நவீனின் சகோதரர் நிக்ஸனும் கடத்தல் வேலைகளுக்கு அகதி களைப் பயன்படுத்துவதில் கில்லாடியாம். இவரும் இப்போது கைதாகியுள்ளார். இதற்கிடையே, தம்பி அண்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 5-ம் தேதி கோடம்பாக்கத்தில் பதுங்கி இருந்த செந்தில்குமாரையும் அடுத்தநாள் சென்னை திருமங்கலத்தில் அமலன், உமாரமணன் ஆகியோரையும் கைது செய்திருக்கிறது போலீஸ். அதேபோல் ஆகஸ்ட் 7-ம் தேதி ராமநாதபுரத்தில் புலிகளுக்கு 'ரெஸின்' என்ற கெமிக்கலை கடத்த முயன்ற இலங்கை அகதிகள் கிருபாகரன், ஜெகன், பிரேம்குமார், துஷ்யந்தன், சுபசீலன், சசிகுமார் ஆகியோரும் கைதாகி கணக்கை ஏகத்துக்கும் கூட்டி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக 'க்யூ' பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

''முன்பெல்லாம் ராமேஸ்வரம் மட்டும்தான் புலி களின் கடத்தல் கேந்திரமாக இருந்தது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் 600-க்கும் அதிகமான படகுகளோடு கடத்தல் படகுகளும் ஊடுருவிவிடும். எல்லாவற்றையும் கடற்படையினர் சோதனை செய்வது கடினம். இதனால் கடத்தல்காரர்கள் கொடி கட்டிப் பறந்தனர். சமீபகாலமாக இந்தப் பகுதியில் கண்காணிப்புத் தீவிரமானது. இதனால் கடத் தல்காரர்கள் தங்களுடைய ஜாகையை சாயல்குடி, வாலிநோக்கம், பனைக்குளம், தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட போலீஸ் தொந்தரவு இல்லாத பகுதிகளுக்கு மாற்றிக்கொண்டார்கள். குறிப்பாக, தொண்டி-அழகன்குளம் கடற்கரைப் பகுதிகள்... இதில் பனைக்குளம், கிருஷ்ணாபுரம், புதுவலசை போன்ற இடங்களில் கடற்கரை வரைக்கும் சாலை வசதி உள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து கடத்தி வரப்படும் பொருட்களை ஆர்.எஸ்.மங்கலத்துக்குக் கொண்டு வந்து அங்கிருந்து தேவிப்பட்டினம் வழி யாக வேன்கள் மூலம் போலீசுக்குத் தெரியாமல் கடற்கரைக்குக் கொண்டு சென்று விடுகிறார்கள். இங்குள்ள சவுக்குத் தோப்புகளும் இதற்குத் தோதாக இருக்கிறது. இதெல்லாம் லோக்கல் போலீஸ்காரர்கள் சிலருக்கும் தெரிந்தேதான் நடக்கிறது. அதனால் எங்கள் ரெய்டுக்கு முன்பே கடத்தல்காரர்களுக்கு தகவல் போய்விடுகிறது. தேவிப்பட்டினம் காவல் நிலையத்திலுள்ள இரண்டு போலீஸ்காரர்களும் தனிப்பிரிவில் பணியாற்றும்

போலீஸ்காரர் ஒருவரும் இதில் அடக்கம். இதெல்லாம் தெரிந்துதானோ என்னவோ புதிதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.பி-யான செந்தில்வேலன் இந்த முறை தனிப்படையினரை வைத்து கடத்தல்காரர்களை மடக்கி இருக்கிறார்'' என்றார்.

'தமிழகக் கடற்கரைப் பிரதேசங்கள் மெள்ள மெள்ள புலி ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறதா?' என கடலோரக் காவல் படை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

''ஆக்டிவ்வாக இருக்கும் விடுதலைப்புலிகள் யாரும் தமிழகத்துக்கு வருவதில்லை. அந்த இயக்கத்தில் எப் போதோ இருந்துவிட்டு வெளியேறியவர்கள்தான் புலிகள் என்ற போர்வையில் கடத்தல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனாலும், 'கடற் புலிகள்' அமைப்பைச் சேர்ந்த பெண்கள் தமிழகத்து அகதி முகாம்களுக்குள் நிதி திரட்டுவதற்காக ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கடத்தலையும் ஊடுருவலையும் கண்காணிப்பதற்காக கடற்படை ஹெலிகாப்டர்கள் ரோந்து செல்கின்றன. ஆனால், அவற்றின் கண்களில் சிக்காமல் இருக்க இதற் காகவே தயாரிக்கப்பட்ட நைலான் வலைகளைப் போட்டு மூடிக்கொண்டு கடத்தல்காரர்கள் தப்பித்துவி டுகிறார்கள்.

மேலும், அவர்களுக்கு இந்த கடற்கரை பிரதேசத் தின் மூலை முடுக்குகள் எல்லாம் நுட்பமாகத் தெரியும். ஆனால், கடற்படை ஃபோர்சுக்கு அந்த ளவுக்கு கடல் பகுதிகள் அத்துப்படி இல்லாமல் இருப்பதும் உண்மைதான்... அதற்காக கடற்கரைப் பகுதிகள் ஒரேயடியாக நம் கட்டுப்பாட்டிலிருந்து போய்விட்டதாக கவலைப்பட வேண்டியதில்லை'' என்றார்.

- குள.சண்முகசுந்தரம், இரா.மோகன்