ஒரு மாமனாரின் மோசடி நாடகம்!

சுமதியை மணந்தது யார்?

மகனுக்கு தான் கல்யாணம் செய்துவைத்த பெண்ணையே, தன் மனைவி என்று போலீஸிடம் சொன்ன தகப்பனைப் பற்றிக் கேட்டதுண்டா?

நீங்கள் நினைக்கிற மாதிரியான விவகாரமில்லை இது..! ஒரு விதமான சட்ட விளையாட்டு!

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சவுந்திரம் என்ற பெண், காய்கறி

வியாபாரம் செய்துவருகிறார். இவர், தன் மகள் சரஸ்வதியை, கவுந்தப்பாடியை சேர்ந்த பாத்திர வியாபாரி நாகராஜுக்கு 2007-ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துவைத்தார்.

அதன் பிறகு நடந்ததை சரஸ்வதி நம்மிடம் விவரித்தார்.

''கல்யாணமான நாள்ல இருந்து வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்திக்கிட்டே இருந்தாரு எம்புருசன். மாமியார் பழனியம்மாளும் மாமனார் வெள்ளைச்சாமியும் கூடச்சேர்ந்துகிட்டு கொடுமைப்படுத்துனாங்க. நாலு மாசத்துக்கு முன்னாடி என்னை வீட்டைவிட்டுத் துரத்திட்டாங்க. நான் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.

அதுக்கப்பறம் விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினாரு, எம் புருஷன். 'நான் உங்களோட சேர்ந்து வாழத் தயாரா இருக்கேன்'னு பதில் நோட்டீஸ் அனுப்பி வச்சேன். இந்த நிலைமையில போன வாரம், 'உன் புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்'னு சொந்தக்காரங்க மூலமா தகவல் வந்துச்சு.

போன 5-ம் தேதி தாராபுரத்துல கொளிஞ்சிவாடிங் கற ஊருல கல்யாணம் நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டேன். உடனே ஈரோடு எஸ்.பி. ஐயாகிட்டே, வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினதையும், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்ட தையும் புகாராச் சொன்னேன்.

அவரோட உத்தரவின் பேர்ல ஈரோடு மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல என் புருஷனையும் மாமனார், மாமியாரையும்கூப்பிட்டு விசாரிச்சாங்க. அப்போ என் மாமனாரு வெள்ளைச்சாமி, 'என் பையன் நாகராஜ் ரெண்டாங்கல்யாணம் பண்ணலை. நான்தான் ரெண்டாங் கல்யாணம் பண்ணினேன். என் பொண்டாட்டி பழனியம்மாளுக்கு உடம்பு சரியில்லாததால, அவளே எனக்கு சுமதிங்கிற பொண்ணைக்கல்யாணம் பண்ணி வெச்சிட்டா'னு போலீஸ்ல அநியாயத்துக்கும் பொய் சொல்லி தன் மகனைக் காப்பாத்தப் பார்த்தாரு!'' என்றார், அன்று நடந்ததை!

மேற்கொண்டு நடந்தவற்றை, சப்- இன்ஸ்பெக்டர் ரேகாவிவரித்தார்.

''வெள்ளைச்சாமி சொன்னதுல தில்லுமுல்லு இருக்கிறதாத் தோணிச்சு. சுமதியைத் தனியாக் கூப்பிட்டு விசாரிச்சப்ப, 'என்னோட சொந்த ஊரு திண்டுக்கல். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற குடும்பம். எட்டாவது வரைக்கும்படிச்சிருக்கேன். எனக்குத் தொடர்ந்து படிக்க ஆசை.ஆனா, எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறோம்னு தாராபுரத்துக்கு என்னோட அப்பா, அம்மா போன வாரம் கூட்டியாந்தாங்க. நாகராஜ்தான் மாப்பிள்ளைனும் சொன்னாங்க. நானும் அதுக்கு சம்மதிச்சேன். கோயில்ல கல்யாணம் நடந்துச்சு. தாராபுரத்துல ஒரு ஸ்டுடியோவுல போட்டோ எடுத்துக் கிட்டோம். நாகராஜுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆன விஷயம் எனக்கோ, என் குடும்பத்துகோ தெரியாது'னு சுமதி தெளிவா சொல்லுச்சு.

அதோட, சுமதி மைனர் பொண்ணுங்கிறதும் தெரியவந்துச்சு. நாகராஜையும், அவங்க அப்பா- அம்மாவையும் தீவிரமா விசாரிச்சப்ப, ஒருவழியா வெள்ளைச்சாமி உண்மையை ஒப்புக்கிட்டாரு. மகனை கேஸ்ல இருந்து காப்பாத்துறதுக்காக, ஆரம்பத்துல ஒரு வக்கீல் கொடுத்த ஐடியாப்படி, பத்திரத்துல தனக்கும் சுமதிக்கும் கல்யாணம் நடந்ததா நோட்டரி பப்ளிக்வக்கீல் மூலமா எழுதி வாங்கியிருக்காரு!'' என்றார்.

வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியது, மைனர் பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் நாகராஜும், இதற்கு உடந்தையாக இருந்த அவருடைய பெற்றோர் வெள்ளைச்சாமி, பழனி யம்மாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சுமதி அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

-- ஏ.முகமது ரஃபி