சிக்கலில் சி.எம்.சி.

தவறான சிகிச்சையால் தவறும் உயிர்கள்!

உலகம் முழுக்க பெருமை பரப்பிய மருத்துவமனை - வேலூர் சி.எம்.சி! சில நாட்களுக்கு முன்னர்தான், தன் நிறுவனரான ஐடா ஸ்கடரின் 138-வது பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டங்களுக்கு நடுவில், சில குமுறல்களும் வெடித்திருக்கின்றன.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்காக

சி.எம்.சி-யில் அட்மிட் ஆனார். இடப் பக்க வயிற்றுப் பகுதியில் பாதிப்பு என்று ஆபரேஷனுக்கு நாள் குறித்தார்கள். ஆனால், ஆபரேஷன் செய்ததோ வலப் பகுதியில்! ஜெயக்குமார் தரப்பு பதறியடித்து தப்பைச் சொல்ல, 'அதனாலென்ன... இடப் பக்கமும் ஆபரேஷன் செய்துவிடலாம்' என்று மருத்துவமனையில் கூலாக பதில் வந்திருக்கிறது. இந்த விவகாரம் உள்ளூர் நாளிதழ்களில் வெளியானதுமே கடுப்பான மருத்துவமனை நிர்வாகம், 'பத்திரிகைக்காரர்களிடமே போய் வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று ஜெயக்குமாரை அதிரடியாக வெளியேற்றியிருக்கிறார்கள். 'இடப் பக்கம் மட்டுமே பாதிப்பு' என்று சி.எம்.சி. தரப்பில் தரப்பட்ட மருத்துவ அறிக்கையை வைத்து போலீஸில் புகார் கொடுத்துவிட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயக்குமார்.

கடந்த 30.10.08 அன்று நடந்த பிரசவத் தில் தன் குழந்தையை இழந்த சிவா நம்மிடம், ''ரத்த அழுத்தமும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயும் இருக்கிறது என்கிற குறிப்புகளுடனேயே என் மனைவியைப் பிரசவத்துக்காகச் சேர்த்தேன். நார்மல் டெலிவரிக்கு முயல்கிறோம் என்று சுமார் இருபத்தைந்து மணி நேரம் காலம் கடத்திய டாக்டர்கள், ஒரு கட்டத்தில் என் மனைவியின் வயிற்றைப் பிடித்து

அழுத்தியிருக்கிறார்கள். இதன் பிறகே என்னிடம் சிசேரியன் செய்வதற்கு அனுமதி கேட்டார்கள். இதற்கிடையில் பனிக்குடத்தைக் கீறிவிட்டு குழந்தையை எடுக்கத் தாமதம் செய்திருக்கிறார்கள். இதற்கு அப்புறம் என்னிடம் குழந்தையின் உயிரற்ற உடலைத்தான் கொடுத்தார்கள். 'கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்ததால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதன் காரணமாகத்தான் குழந்தை இறந்துவிட்டது' என்று காரணம் சொன்னார்கள். கர்ப்ப கால சர்க்கரை நோய் இருக்கிறது என்று முன்கூட்டியே சொல்லியும், அதற்கேற்ற முறையில் பிரசவம் பார்க்க வில்லை என்பதுதான் உண்மை.

'முதல் குழந்தை நார்மலாகப் பிறந்ததால், இந்தக் குழந்தையையும் நார்மல் டெலிவரி செய்ய வைக்கலாம் என்றுதான் காலம் தாழ்த்தினோம்' என்றும் சொன்னார்கள். என் முதல் குழந்தை இவர்களது துணை நிறுவனமான பாகாயம் சிபிகிஞி மருத்துவமனையில்தான் பிறந்தது. அது நார்மல் டெலிவரி இல்லை. ஆயுத கேஸ்தான்! அதன் விளைவாக என் மகளுக்கு வலது கை முடங்கிப் போனதில் ஏற்கெனவே நாங் கள் நொறுங்கிப் போயிருக்கிறோம்.

இப்போது என் தீவிரத்தைப் பார்த்து, 'தெரியாம தப்பு நடந்துடுச்சு. நாங்களும் மனுஷங்கதானே'னு கெஞ்ச ஆரம்பிச்சாங்க. 'பிரசவத்துக்கு ஆன செலவை நீங்கள் கட்ட வேண்டாம். அடுத்த பிரசவத்தையும் இலவசமாப் பார்க்கிறோம்'னும் ஏதோ வியாபார நஷ்டத்தை ஈடு கட்டுகிற தொனியில் பேரம் பேசி னாங்க. அவங்ளை நான் சும்மா விடப் போறதில்லை!'' என்கிறார். பல மாநில மக்களும் வந்து சிகிச்சை பெறுகிற மருத்துவமனை இது. டிசம்பர் 7-ம் தேதி காலில் ஏற்பட்ட காயத்துக்காக மேற்கு வங்கத்திலிருந்து வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 21 வயதான தாபோதி சாதுகான் என்கிற பெண் இறந்துபோனார். இதற்கு சி.எம்.சி-யின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்று வேலூரையே ஸ்தம்பிக்க வைத்தனர். இறந்து போனவரின் சகோதரர் சஞ்சல் சாதுகான், ''சி.எம்.சி. நல்ல ஹாஸ்பிடல்னு எங்க ஊர்ல சொன்னாங்க. இப்பதான் இதைவிட மட்டமான மருத்துவமனை வேற எங்கேயும் இல்லைன்னு தெரிஞ்சுது. நோயாளிகள்கிட்ட மனிதாபிமானம் காட்ட மாட்டேங்கிறாங்க. எதுக்கெடுத்தாலும் பணம் பிடுங்குறாங்க...'' என்று பொரிந்தார்.

மருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். ''வெளியில் வருவது சில கேஸ்கள்தான். உள்ளபடிக்கு தவறான சிகிச்சை காரணமாக தினமும் இரண்டு, மூன்று மரணங்களாவது ஏற்படுவது சாதாரணம்!'' என்று அதிர வைத்தவர்கள், ''ஏழைகளுக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு அப்படியே செயல்பட்டுக்கொண்டு இருந்ததால்தான் அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் இங்கே வரத்தொடங்கினர். இதனால், சி.எம்.சி. ஒரு குட்டி அரசாங்கம் போலவே உருவெடுத்துவிட்டது. பணிபுரியும் டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மத்தியில் மலையாள கிறிஸ்து வர்கள், வெளிநாட்டு கிறிஸ்துவர்கள், தமிழ்நாட்டு கிறிஸ்துவர்கள் என்று இங்கே பிரிவினை பார்ப்பதாக ஏற்கெனவே முணு முணுப்புகள் உண்டு. இங்கு சில வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் இருந்தாலே, வெளிநாட்டில் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதால் பல திறமையான மருத்துவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் கிளம்பிப் போய்விட்டனர். தற்போது இருப்பவர்களில் பலர் பயிற்சி மருத்துவர்கள்...'' என்றனர்.

சி.எம்.சி. மருத்துவமனையின் மருத் துவக் கண்காணிப்பாளர் ஞானராஜிடம் பேசினோம்.

''சி.எம்.சி-யில் உள்நோயாளிகளாகக் கிட்டத் தட்ட 1800 பேருக்கும்,

புறநோயாளிகளாக இரண்டாயிரம் பேருக்கும் சிகிச்சை அளிக்கும் வசதி இருக்கிறது. அதைவிட அதிகமான நோயாளிகள் வருவதால்தான், பணிச்சுமை காரணமாக அவ்வப்போது சிறிய பிரச்னைகள் எழுந்துவிடுகிறது. இங்கு வந்து சிகிச்சை பெறும் அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை கொடுக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். பத்துப் பேர் வந்தால்... குணமடைந்த ஒன்பது பேர் ஒன்றும் சொல்வதில்லை. மீதியுள்ள ஒருவர் தரப்பிலிருந்து எங்களைக் குறை சொல்கிறார்கள். இருப்பினும், பிரச்னைகளை துப்புரவாகத் துடைப்பதுஎப்படி என்று ஆலோசித்துவருகிறோம்!'' என்றார் அவர்.

இந்தப் பிரச்னை ஒருபுறமிருக்க கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்காக அதை மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டடத்தின் நாலாவது மாடியில் தேக்கி வைத்திருக்கின்றனர். 'அது திறந்தவெளியாக இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு அக்கம் பக்கம் உள்ள மக்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் வருகின்றன' என்று மருத்துவமனை அருகில் இருக்கும் தோட்டபாளையம் பகுதி மக்கள் புலம்புகின்றனர். மருந்துக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளைப் பாலாற்றில் கொட்டுவதால் நிலத்தடி நீர் விஷத்தன்மையாகி வருவதாக காங்கேயநல்லூர் பகுதிவாசிகள் வெகுண்டெழுந்திருக்கிறார்கள். வேலூர், நகராட்சியாக இருந்தபோதே சி.எம்.சி. பல கோடிகளை வரி பாக்கியாக வைத்திருந்தது. இன்று மாநகராட்சியான பிறகும் அதைச் செலுத்தவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் கவலைப்படுகிறது.

- டி.தணிகைவேல்
படங்கள் எம்.ஆர்.பாபு