பார்வதியின் பாலிவுட் கனவு!

எட்டு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும்உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய அழகி இடம் பெற... இந்தியர்களிடம் 'அழகான நம்பிக்கை' துளிர்த்தது.

ஆனால், 'மிஸ் வேர்ல்டு' பட்டம் ஜஸ்ட் மிஸ் ஆகி, 21 வயது இந்திய அழகிபார்வதி ஓமனக்குட்டன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடந்த

14-ம் தேதி இரவு தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், உலக அழகியாக ரஷ்யாவைச் சேர்ந்த சென்யா சுகினோவா, இரண்டாவ தாக இந்தியாவின் பார்வதி, மூன்றாவதாக வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் அண்ட் டுபாக்கோவைச் சேர்ந்த கேப்ரியல் வெல்காட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

'இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே உலக அழகிப் பட்டம் எனக்குத்தான் என உறுதியாக நம்பி இருந் தேன். ஆனால், முடிவு அறிவிக்கப் பட்ட போது என் மனம் படபடக்கத் தொடங்கியது. மூன்றாம் பரிசு இல்லையென்ற தும் கொஞ்சம் நிம்மதி. ஆனால், இரண்டாவதாக என் பெயர் அறிவிக்கப்பட்டதும் நெஞ்சே வெடித்துவிடும் போலாகியது. எனினும், சில நொடிகளில் மனதைத் தேற்றிக்கொண்டேன்!'' என்று பெரு மூச்சு விடும் பார்வதி, அடுத்து சொன்ன விஷயம்தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது -

''போட்டியின் மற்ற பிரிவுகளில் எல்லாம் வெற்றி பெற்ற நான் பட்டம் வெல்வதைத் தீர்மானிக்கும் அறி வாற்றல் போட்டியிலும் சிறப்பாகவே பங்கேற்றேன். ஆனால், நடுவர்களின் பாரபட்சத்தால் என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனது!'' என்று ஜோகன்ஸ்பர்க்கில் ஒரு தொலைக்காட்சிக்கு குட்டன் அளித்த பேட்டியாக வெளிவந்த தகவல்தான் சர்ச்சைக்குக் காரணம்.

இது குறித்து மும்பையின் நெருல் பகுதியில் வசிக்கும் பார்வதியின் ஒன்றுவிட்ட

சகோதரர் சந்தோஷிடம் பேசினோம். ''பார்வதியின் தந்தை குட்டன் மும்பை தாஜ் ஹோட்டலில் பணியாற்றுகிறார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அன்று அவரும் ஹோட்டலில் சிக்கி நூலிழையில் தப்பினார். அந்த டென்ஷன் கிட்டத்தட்ட பார்வதிக்கு பட்டம் கிடைக்குமா என்ற நேரத்திலும் எங்களுக்கு இருந்தது. பார்வதி எட்டாவது படிக்கும்போதே... அதாவது பதின்மூன்று வயதிலிருந்தே உலக அழகியாக வேண்டும் என்ற ஆசை அவளிடம் உருவானது. அதையே அடிக்கடி நினைத்துக் கொண்டு பேசி வந்தவள், இறுதிப் போட்டிவரை சென்றதே வெற்றிதான். பார்வதியுடன் தென்னாப்பிரிக்கா சென்ற அவளுடைய பெற்றோர் தற்போது மும்பைக்கு வந்துவிட்டனர். பார்வதி வர இன்னும் பத்து நாட்கள் ஆகும். நடுவர் முடிவு சர்ச்சை பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும்!'' என்றார்.

உலக அழகிப் பட்டம் நூலிழையில் தவறி விட்டாலும், பார்வதிக்காக பாலிவுட்டில் 'ஜிலுஜிலு ஹீரோயின்' சான்ஸ் காத்திருக்கிறது. முடிவு வெளியான ஒரு மணி நேரத்தில் கரண் ஜோஹர், ஜே.பி.தத்தா உட்பட பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களிடம் இருந்து பார்வதிக்கு வாழ்த்துகள் குவிந்ததாம். பார்வதியும் தன் தோழி களிடம், ''ஹிருத்திக் ரோஷன், ஷாரூக்கானுடன் நடிக்க அதிக விருப்பம்!'' என்று அடிக்கடி கூறி வந்துள்ளாராம்.

ஐஸ்வர்யாராய், சுஷ்மிதாசென், யுக்தாமுகி மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய பாலிவுட் ஹீரோயின் அழகிகள் பட்டியலில் பார்வதியின் பெயரும் இடம் பிடிக்கக் கூடும். அதற்குமுன், 'அழகிப் போட்டி' தேர்வில் ஏதேனும் மர்மங்கள் இருந்ததா என்று இந்தியா திரும்பி வந்து அவர் சொல்லட்டும் என்று வடக்கத்திய மீடியாக்கள் நியூஸ் தாகத்தோடு காத்திருக்கின்றன!

- ஆர்.ஷஃபி முன்னா