நியூயார்க்கிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி

'காலணி' ஆதிக்கம்.. சிக்கிய புஷ்!

ஜனாதிபதி பதவியிலிருந்து 2009-ம் ஆண்டு, ஜனவரி 20-ம் தேதி விலகவிருக்கும் ஜார்ஜ் புஷ் மீது நடத்தப்பட்ட காலணித் தாக்குதல்தான் இப்போது சர்வதேச அளவில் ஹாட் டாபிக்!

ஏறக்குறைய அமெரிக்காவின் காலனி நாடுகளாக மாறிவரும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அவர் பிரியாவிடை பெற்றபோதுதான், இந்த 'ஷு' வீச்சு நடந்திருக்கிறது.

ஈராக் அதிபர் நௌ£ரிமல்கியுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் புஷ், ''2011 வரை அமெரிக்க துருப்புகள் ஈராக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளில்

ஈடுபடும்!'' என்று மைக்கில் பேசிக்கொண்டு இருந்த போதே... மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த தொலைக்காட்சி நிருபர் முடாண்டர்-அல்-சைதி, திடீரென்று தன் ஷுவைக் கழற்றி, ''நாயே! உனக்கு இதுதான் ஈராக்கிய மக்களின் குட்பை!'' என்று உரக்கச் சொல்லி புஷ் மீது வீசினார்.

அடுத்த நிமிடமே, ''இது ஈராக் போரில் அநாதைகளான விதவைகளின் குட்பை!'' என்று அடுத்த ஷு-வையும் உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதரான அமெரிக்க ஜனாதிபதி மீது வீசினார். மற்ற நிருபர்கள் திகைத்துப்போய் நிற்க, அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், சைதியை வெளியே இழுத்துச் சென்றனர்.

'அல்-பக்தாதியா' நியூஸ் சேனலின் நிருபர்தான் முடாண்டர்-அல்-சைதி. கெய்ரோவைச் சேர்ந்த இவர், சேனலின் பாக்தாத் நிருபராக இருக்கிறார். ஷு-க்கள் பறந்துவந்ததைக் கண்டு சற்றே பதறிப் போன புஷ், பின்னர் சுதாரித்துக்கொண்டு சிரித்தபடியே, ''அந்த ஷுவின் சைஸ் 10!'' என்று வேடிக்கையாகச் சொல்லி அங்கிருந்தவர்களின் மூடை மாற்றினார். அதோடு, ''ஈராக்கிய மொழி யில் 'ஷு' என்றால் மலர்கள் என்றுகூட அர்த்தம் உண்டு!'' என்று ஜோக்கடித்தாராம்.

இஸ்லாமிய நாடுகளில் செருப்பால் அடிப் பது மிகவும் மோசமான தண்டனையாகக் கருதப் படுகிறது. ஈராக்கில் 'செருப்பால் அடிப்பேன்!' என்பது மிகப் பெரிய கெட்டவார்த்தை. சதாம் உசேனைக் கைது செய்து சிறையில் அடைத்தபோது, அவருடைய சிலைகளையும் உருவ பொம்மைகளையும் பல ஈராக்கி யர்கள் செருப்பால் அடித்ததைத் தொலைக்காட்சியில் காண்பித்தது நினை விருக்குமே..!

தற்போது காலணிகளை வீசிய நிருபர், ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிலகாலம் பணயக்கைதியாக வைக்கப் பட்டிருந்தார் என்றும், அப்போது அவருக்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஒபாமாவின் வெற்றியை நடுத்தெருவில் கொண்டாடிய ஈராக்கியர்களுக்கு, புஷ் மீது மட்டும் கடும் வெறுப்பு உண்டு. ஆனால், பாவம்... 'ஷு' வீச்சை தடுக்கக் குறுக்கே பாய்ந்த (புஷ்ஷின்) செய்தித் தொடர்பாளர் டானா பெரினோவுக்குதான் 'ஷு' பட்டு கண்ணுக்குக் கீழே காயம்!

இந்த சம்பவத்துக்குப் பிறகு ஈராக்கி யர்கள் மத்தியில் சைதி மிகப்பெரிய ஹீரோவாகிவிட்டார். 'அமெரிக்க அதிபரையே தாக்கியவர்' என்று புகழேணியின் உச்சிக்கே சென்று விட்டார்.

புஷ்ஷைக் கொடுங்கோலனாக எண்ணி, ஈராக்கியர்கள் வெறுக்கிறார்கள். இதுவரை ஆறு லட்சம் ஈராக்கியர்கள் போரில் இறந்ததாகவும், பத்து லட்சம் பேர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. 'புஷ்ஷைவிட சதாம் உசேன் எவ்வளவோ பரவாயில்லை!' என்று கூறுகிறவர்கள் ஈராக்கில் அதிகம்.

இந்நிலையில், அரசு ஆதரவாளர்களோ ஈராக்கில் இஸ்லா மியத் தீவிரவாதம் எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று என்கிறார்கள். ''ஈராக்கியப் பத்திரிகை யாளர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுப்பதில்லை. பலர் தீவிரவாதிகளிடம் மாமூல், மாதச் சம்பளம் வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களின் ஒத்தாசையால் உலகெங்கும் பேசப்படும் விஷயமாக ஈராக் போர் ஆகிவிட்டது. தீவிரவாதிகளின் நோக்கமும் நிறைவேறிவிட்டது. அதிபர் புஷ்ஷை இஸ்ரேலிய மற்றும் இந்தியாவின் நண்பராகவே ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் கருதுகின்றன. பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை மூடுவதும், தலைவர்களைக் கைது செய்வதும் தீவிரவாதிகளுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது!'' என்கிறார், ஈராக்கில் பணியாற்றிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர்.

உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்பு அமெரிக்க அதிபருக்கு உண்டு. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குள் செக்யூரிட்டி கெடுபிடிகளைக் கண்டு பயந்து, புஷ்ஷின் பேட்டி களை நேஷனல் பிரஸ் கிளப்பில் அமர்ந்து 'பீர்' குடித்தபடியே கவர் செய்யும் நிருபர்கள்தான் அதிகம்.

இந்நிலையில், மேற்படி சம்பவத்தால் திகைத்துப் போன செக்யூரிட்டி அதிகாரிகள் நம்மிடம், ''ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி நடக்கும் என்று கனவுகூட காணவில்லை. கடும் வார்த்தைகளை வீசும் நிருபர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், செருப்பை வீசும் பத்திரிகையாளரை இதுவரை கண்டதில்லை!'' என்கிறார்கள்.

செருப்பை வீசிய பத்திரிகையாளர் தீவிரவாதிகளின் ஆதரவாளரா அல்லது மிரட்டப் பட்டாரா என்று அமெரிக்க உளவு நிறுவனம் ஆராய்ந்துவருகிறது. ரகசியமான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சைதியிடம் விசாரணை நடக்கிறது. 'அல்-பக்தாதியா' செய்தி சேனல், ''சைதி எங்கோ மறைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார். அவரை விடுதலை செய்யவேண்டும். அவர் கொலையும் செய்யப் படலாம்!'' என்று அலறிக்கொண்டிருக்கிறது.