Follow - up

பிறந்த தேதி குளறுபடி... டிஸ்மிஸ் அதிரடி!

'ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் மேனேஜராக இருந்த செல்வராஜ், தன்னுடைய பிறந்த தேதியை மாற்றிக் கொடுத்துப் பணியில் சேர்ந்துள்ளார்!' என சங்க உறுப்பினர்களே குற்றம்சாட்டினர். இந்த செய்தியை 20.7.08 ஜூ.வி-யில் 'தேதி மோசடி மேனேஜர்... கைத்தறித் துறையில் கலாட்டா' என்ற தலைப்பில் வெளி யிட்டிருந்தோம். இப்போது ஜூ.வி. செய்தி உறுதி செய்யப்பட்டு, மேனேஜர் செல்வராஜ் டிஸ்மிஸ் செய்யப் பட்டுள்ளார்.

''1987-ம் ஆண்டு மேனேஜர் பதவிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூல மாக நியமிக்கப்பட்டார் செல்வராஜ். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவின்படி

அவரு டைய பிறந்ததேதி 13.7.1958. அதன்படி அவருக்கு அப்போது 29 வயது. அந்தப் பதவிக்கு அப்போது வயது உச்சவரம்பு 30 என்பதால், தகுதியின் அடிப்படையில் செல்வராஜுக்கு வேலை கிடைத்தது.

ஆனால்... பதினைந்து வருஷங்கள் கழித்துதான் செல்வராஜின் உண்மையான பிறந்ததேதி 13.7.1955 என்பதும், வேலை கிடைக்கவேண்டும் என்பதற்காக 32 வயதான செல்வராஜ் 29 வயது என பிறந்ததேதியைத் திருத்தி பணியில் சேர்ந்த விஷயம் தெரிந்தது.

மேலும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 86-ம் ஆண்டும், 87-ம் ஆண்டும் வெவ்வேறு பிறந்ததேதி கொடுத்து தன் கல்வித் தகுதியைப் பதிவு செய்திருக்கிறார்!'' என்பதை சங்க உறுப்பினர்கள் நம்மிடம் தெரிவித்திருந்தனர்.

நம்முடைய செய்தியை அடுத்து, அப்போது தமிழகக் கைத்தறித் துறை அமைச்சராக இருந்த என்.கே.கே.பி. ராஜா விசாரணைக்கு உத்தரவிட்டு செல்வராஜை சஸ்பெண்ட் செய் தார்.

இந்த நிலையில், ஓய்வு பெற்ற கூட்டுறவு இணை பதிவாளர் ப.கு.கணேசன்

என்பவர் மூலம் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரிடமும் செல்வராஜ் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. செல்வராஜிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

இறுதியாக கடந்த ஜனவரி மாதம், ''செல்வராஜ் மீதான குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன!'' என்று விசாரணை அதிகாரி அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப் படையில் தமிழக கைத்தறித் துறை, செல்வராஜுக்கு கடந்த வாரம் டிஸ்மிஸ் ஆர்டர் வழங்கியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய சங்க உறுப்பினர் சுப்பிரமணியன், ''இந்த செய்தியை உரிய நேரத்தில் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது ஜூ.வி-தான். செல்வராஜ் டிஸ்மிஸ் செய்யப்பட்டது மட்டும் போதாது. அவர் அரசை ஏமாற்றிப் பணியில் சேர்ந்துள்ளார். இது கிரிமினல் குற்றம். எனவே, இவருக்கு இவ்வளவு ஆண்டுகள் அரசாங்கம் கொடுத்த சம்பளம் மற்றும் இதர படிகளை மொத்தமாக அவரிடமிருந்து வசூல் செய்யவேண்டும். இல்லையென்றால்... உறுப்பினர்களாகிய நாங்கள் கோர்ட்டுக்குப் போவோம்...'' என்றார்.

இதுபற்றி தாண்டாம்பாளையம் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் தனி அலுவலர் கே.கணேசன், கைத்தறித் துறை உதவி இயக்குநர் ராஜகோபால் ஆகியோரிடம் பேசினோம். ''விசாரணை அதிகாரியின் அறிக்கைப்படி செல்வராஜ் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசுதான் முடிவு செய்யும்!'' என்றார்கள்.

நீதி நின்று கொல்லும் என்பதற்கு செல்வராஜ் டிஸ்மிஸ் ஓர் உதாரணம்!

- ஏ.முகமது ரஃபி