தலைமுடியை அறுத்து நடந்த ஈவ் டீஸிங்...

'தலைவர்'வீட்டுப் பையனை காப்பாற்றும் போலீஸ்!

தமிழகத்திலேயே கல்வியறிவு பெற்ற மாவட்டங் களில் முதலிடத்தில் இருப்பது குமரி மாவட்டம்தான். அப்பேர்ப்பட்ட மாவட்டத்தில்... ஈவ் டீசிங் கொடுமையால் மருத்துவமனையில் கதறிக் கொண்டிருக்கிறார் மாணவியான ப்ரீதா.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் மூலச்சலை சேர்ந்த ப்ரீதாவின் அப்பா வெளிநாட்டில் கட்டடவேலை செய்கிறார். அக்கா நர்ஸிங் படிக்கிறார். அண்ணன் படிப்பை நிறுத்திவிட்டு, கூலி வேலைக்குப் போகிறார். கடைக்குட்டியான

ப்ரீதா மூலச்சல் அரசு உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி.

தக்கலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ப்ரீதாவை சந்தித்தோம்.

''ஓய்ஸ், ஐயப்பன்னு எங்க ஊர் பையனுவ ரெண்டு பேரு எப்பப் பார்த்தாலும், எங்கிட்டஏதாவது ஒரண்டை இழுத்துக்கிட்டே இருப்பானுவ. பாட்டுப் பாடுறது, பைக்ல போகும்போது மண்டைலதட்டுறதுன்னு சீண்டிக்கிட்டே இருந்தானுவ. நானும் எதுக்கு வம்புனு எம்பாட்டுக்குப் போயிருவேன். போன மாசம் ஒரு நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வரும்போது என் துப்பட்டாவையும் கொண்டை முடியையும் புடிச்சு இழுத்தாங்க. நான் என்ன பண்றதுனு தெரியாம, அழுதுட்டே போய் எங்கம்மாட்ட சொன்னேன். உடனே எங்கம்மா அந்த பையன் வீட்டுக்குப் போய், 'உங்க பையனை ஒழுங்கா இருக்க சொல்லுங்க'னு கண்டிச்சுட்டு வந்தாங்க.

அடுத்த நாள் பரீட்சைக்குப் போயிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கிட்டிருந்தேன். பழையபடி அவனுவ வந்தானுவ. 'இந்த கொண்டை முடியையும், துப்பட்டா வையும் புடிச்சி இழுத்ததுனாலதானடி உங்க வீட்ல போய் சொல்லிட்டே?'னு சொல்லி துணி வெட்ற ஒரு பெரிய கத்திரிகோலால என் ரெட்டை ஜடைல ஒரு ஜடையை வெட்டி, என் துப்பட்டாவை உருவி ஆத்துல எறிஞ்சுட்டாங்க...'' என்று கண்ணீர் விட்டார் ப்ரீதா.

தொடர்ந்து அவருடைய அம்மா புஷ்பம், ''நாங்க ஓய்ஸ், ஐயப்பன் ரெண்டு பேர் மேலயும் கம்ப்ளெ யின்ட் குடுத்தோம்ங்க. அதுல ஐயப்பன்ங்கிற பையனை மட்டும்

பிடிச்சு வச்சுருந்தாங்க. ஓய்ஸ் பெரிய இடத்துப் பையன். காங்கிரஸ் பிரமுகரோட மகன்கிறதால, அவனை 'தலைமறைவு'ங்கிற பேர்ல எங்கயோ ஒளிச்சு வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு, ஐயப்பன் நிபந்தனை ஜாமீன்ல வெளியவந்தான். ஏற்கெனவே கோவத்துல இருந்த அவன், போன வெள்ளிக்கிழமை எம் பொண்ணு ஸ்கூல் போயிட்டு வர்றப்போ, அவன் கூட்டாளி வெங்டேஷ்ங்கிறவனையும் சேர்த்துக்கிட்டு எம் பொண்ணு வாயில தொண்டை வரைக்கும் துணியை திணிச்சுட்டு, காதுல இருந்த கம்மல் எல்லாம் அத்து எடுத்துட்டு, எம்பொண்ணை செருப்புக் காலால மிதிச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க. ப்ரீதா அழுதுட்டே அங்கேயே கொஞ்ச நேரம் கெடந்திருக்கா. அப்புறம் அவளாவே நொண்டி நொண்டி வந்து எங்கிட்ட சொன்னா. எங்க வீட்டுக் காரரும் ஊர்ல இல்ல. எனக்கு என்ன செய்றதுனே தெரியலைங்க...'' என்று இயலா மையில் கண்ணீர் வடித்தார்.

ப்ரீதாவுக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்துப் போராடி வரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தக்கலை ஒன்றிய செயலாளர், சுஜா ஜாஸ்பினிடம் பேசி னோம். ''பத்தாம் வகுப்பு படிக்கிற பொண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்தீங்களா? இந்த மாதிரி பசங்களுக்குக் கடுமையான தண்டனை குடுக்கணும். ஆனா, காவல் துறை இதுவரைக்கும் முதல் குற்றவாளியான ஓய்ஸை பிடிக்கவில்லை. திரும்பவும் அந்த பொண்ணை தாக்குன சம்பவத்துல இன்னும் எஃப்.ஐ.ஆர்.கூட ஃபைல் பண்ணல. அந்த பொண்ணு வீட்டுக்கு விசாரணைங்குற பேர்ல வந்த போலீஸ்காரங்க, 'இவ்ளோ நாள் அவன் பாட்டுப் பாடினப்போ, உனக்கு சுகமா ரசிக்கிற மாதிரி இருந்திருக்கு. அப்பவே ஏண்டி சொல்லல? இப்ப எங்க தூக்கத்தைக் கெடுக்குறீங்க'னு கேவலமா பேசுறாங்க. அந்த ஓய்ஸ் எங்க இருக்கான்னு போலீஸ§க்கு நல்லாவே தெரியும். இருந்தும், பெரிய புள்ளிகள் பின்னாடி இருக்குறதுனால தலைமறைவுனு சாக்கு சொல்றாங்க. நிபந்தனை ஜாமீனில் வெளிய வந்த ஒருத்தன், திரும்பவும் அதே தப்புப் பண்ணியிருக்கான். அவன் மேல என்ன நடவடிக்கை எடுக்கப் போறாங்க? முதல் குற்றவாளி ஓய்ஸை எப்போ கோர்ட்ல ஆஜர் பண்ணப் போறாங்க?'' என்று கேள்விகளைத் தொடுத்தார்.

தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் தங்க விஜயகுமாரிடம் கேட்டபோது, ''ஐயப்பன், வெங்டேஷ் ரெண்டு பேர் மேலயும் விசாரணை நடந்துட்டிருக்கு. மத்தபடி, எல்லா விஷயங்களும் டி.எஸ்.பி., எஸ்.பி. லெவல்லதான் நடந்துட்டிருக்கு. நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல...'' என்றார்.

அடடே... என்னவொரு பொறுப்பான பதில்!

- ஸ்வர்ணரூபா