இரக்கமில்லா வெறித்தனத்தில் இலங்கை ராணுவம்!

'வீடியோ பதிவு யாருக்காக?'

'அப்பாவையும் அக்கம் பக்க உறவுகளையும் காவு வாங்கிய சிங்கள ராணு வத்துக்கு எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாது காப்பு வளையம் என்கிற பெயரில் என் போன்றவர்களைப் பாடாகப் படுத்துகிறார்கள் ராணுவத்தினர். கொஞ்சம் அழகாகப் பிறந்த பாவத் துக்காக, நினைக்கும்போதெல்லாம் குதறப்பட்ட என் தோழி, இப்போது சித்தப்பிரமை பிடித்துக் கிடக்கிறாள். ஆனா லும், ஆடை கிழிக்கும் வேலை மிச்சமென நினைத்து பிரமை பிடித்தவளையும் பிறாண் டுகிறது ராணுவம்!''

-மனிதநேயமுள்ள மருத்துவர் ஒருவர் மூலமாக வெடித் திருக்கும் ஈழப்பெண்ணின்

குரல், நெஞ்சையே நொறுக்கிப் போடுகிறது. ராணுவத்தை நம்பிப்போன அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த நிலைமையும் விவரமாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள் கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர் சிலர்.

''புலிகளுடனான போரை நடத்தும்போதெல்லாம் ராணுவம் போடும் வெறியாட்டங்களைத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத் தரப்பினர், எவ்வளவோ வற்புறுத்தியும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதிக்குச் செல்லவில்லை. இந்தக் கடுப்பில் கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, மக்களை உயிர் பயத்தில் ஓடவைத்தது ராணுவம். இதனால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தின் முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சோதனை முடிந்து அனுப்பப்படுபவர்களை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பிரிக்கிறார்கள். ஆண்களை யும், பெண்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறிக்கிடக்கும் தமிழ் தலைவர்கள் சிலருடைய ஆதரவாளர்கள் விசாரிக்கிறார்கள். சந்தேகப்படும்படி அவர்கள் யாரையெல்லாம் குறித்துத் காட்டுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங் களிலேயே முடிவு கட்டுகிறது ராணுவம்.

மக்களோடு மக்களாகப் புலிகள் ஊடுருவி கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளில் மரப்பொந்து களிலும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மூலமாக ராணுவம் மற்றும் சிங்கள அரசில் இருக்கும் முக்கிய ஆட்களைக் கொன்றுவிடுவார்களோ என்கிற அச்சத்தில்தான் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களை இந்த ஆராய்ச்சி வேலையில் இறக்கியிருக்கிறது ராணுவத் தரப்பு. இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றியே ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இளம்பெண்களின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவத்தின் வல்லுறவுக்கு உடன்படாமல் வீம்பு காட்டும் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்நடத்தப்படுகிறது. அவர்களை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் நடத்தப்படும் சித்ரவதைகளை ராணுவத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளே மீடியாக்களிடம் சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.

இதற்கிடையில், தமிழ்ப் பெண்களை வற்புறுத்திப் புணர்வதைக்கூட இரக்கமேயில்லாமல் வீடியோ பதிவும் செய்கிறார்கள். இத்தகைய வீடியோ பதிவுகள் யாருக்கு எதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ராணுவ வீரர்கள் செய் வதைக் காட்டிலும், தமிழ்ப் பெண் களைப் பெரிய அளவில் சித்ரவதை செய்வது ராணுவத்தின் உளவுத் துறையில் இருக்கும் சிலர்தான்.

அவர்கள் தங்கள் முகாம்களில் எடுபிடி வேலைகள் செய்யவும், விரும்பும்போதெல்லாம் இச்சை களைத் தீர்த்துக்கொள்ளவும் இளம்பெண்களைப் பயன் படுத்துகிறார்கள். உளவுத் துறையின் வெறியாட்டத்துக்கு இரையாகி, பலியான பெண்களில் பலரும் எரிக்கப்பட்டு விடுகிறார்கள்.

உலக நாடுகளிடம், 'எங்களை நம்பி வந்த மக்களுக்குத் தரமான உணவும் மருந்துப் பொருட்களும் வழங்குகிறோம்!' என்று சொல்லும் சிங்கள அதிகாரிகள், உண்மையில் வெறித்தனத்தைத் தவிர, வேறெதையும் தமிழ் மக்களிடம் காட்டவில்லை. இத்தகைய கொடுமைகளை ராணுவம் செய்வது பற்றி சிங்கள மக்களுக்குக்கூடத் தெரியாது. மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய கொடூரங்கள், இரக்கமுள்ள சிங்கள மக்களிடமும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக் கிறது!'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள்,

''தற்காலிக விடுப்பிலிருக்கும் ராணுவ வீரர்கள், இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, அவர்களின் உறுப்புகளை அறுத்து எறியும் அவலமும் நடக்கிறது. வவுனியா மற்றும் விசுவமடு பகுதிகளில் இருக்கும் இடைத் தங்கல் முகாம்களில் தமிழ்ப் பெண்கள் எந்தளவுக்கு சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று நேர்மையான ராணுவ அதிகாரிகளே எங்களிடம் சொல்கிறார்கள். ஐ.நா-வின் பிரதிநிதியாக அந்த இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்த ஜான் கோல்ம்ஸின் கவனத்துக்கு அத்தகைய கொடூரங்கள் கொண்டு செல்லப்பட்டும், இலங்கையின் நிவாரண அமைச்சரான ரிஷாட், அதை திசைதிருப்பி, மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டார்...'' என்றார்கள்.

இதற்கிடையில், இந்திய பிரதமருக்கு ஈழப்பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் அவசரக் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், ''வவுனியா மருத்துவமனையில் தமிழ் கர்ப்பிணிகளை வற்புறுத்திக் கருவைக் கலைக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றச் சொல்லி மருத்து வர்களையும் ராணுவம் மிரட்டுகிறது. மொத்தத்தில், தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து ராணுவம் நடத்தும் வெறியாட்டம், ஹிட்லர் காலத்தில்கூட நடக்காதது!'' என்று சொல்லவொண்ணா வேதனையோடு கலங்கி யிருக்கிறார்.

இறுதி சவம் விழுவதற்குள்ளாவது உலகத்தின் இரக்கப்பார்வை ஈழத்தின் பக்கம் விழுமா?

- இரா.சரவணன்