பல்ஸ் எகிறும் பொதுமக்கள்!

தாறுமாறாக ஆட்டோ கட்டணம்...

'வெறும் ரெண்டே கிலோ மீட்டர் ஆட்டோ வுல போறதுக்கு எண்பது ரூபாய்

தண்டம் கொடுக்கவேண்டிய கொடுமை கோவையிலதான் நடக்குது. இந்த அநியாயத்தை எல்லாம் யாரு கேக்கறது?''- சமீபத்தில் ஜூ.வி. வாய்ஸ் மெயிலை தொடர்பு கொண்டு இப்படி கொந்தளித்தார், 'கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ்' அமைப்பின் செயலாளர் லோகு.

லோகுவை சந்தித்து பேசியபோது, ''குடிசைத் தொழில் தொடங்கி, சாஃப்ட்வேர் கம்பெனிகள் வரை குவிஞ்சு கிடக்கிற கோவையில, ஜனநெருக்கடி எந்தளவுக்கு இருக்கு துன்னு நான் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லீங்க. சென்னைக்கு அடுத்தபடியா வெளியூர், வெளி மாநிலத்து ஆளுங்க தினமும்ஆயிரக்கணக்குல

குவியுற ஊர் கோவைதான். இங்க குறைஞ்சது பத்தாயிரம் ஆட்டோக்கள் ஓடுதுங்க. ஆனா, ஆட்டோ வாடகையை நினைச்சாதான் தலைசுத்துது. மினிமம் சார்ஜே அறுபது ரூபா, எழுபது ரூபான்னு போட்டுத் தாக்குறாங்க. ஆட்டோ வாடகைக்கு எந்த வரைமுறையும் இல்லை.

இந்தக் கொடுமையைப் பத்தி பலதடவை கவர்மெண்டுல புகார் பண்ணியாச்சு. ஆனா, எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கறதில்லை. காரணம்... வலுவான தொழிற்சங்கங்கள்ல ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கமும் முக்கியமானதுங்கிறதுதான். இந்த சங்கத்து ஆளுங்களோட ஆதரவு எல்லாவிதத்துலேயும் தங்களுக்கு தேவைங்கிறதால, எந்த கட்சிக்காரங்களும் இவங்களை பகைச்சுக்க மாட்டேங்கிறாங்க.

2007-ம் வருஷ கடைசியில கவர்மெண்டு போட்ட உத்தரவுப்படி முதல் ரெண்டு கிலோ மீட்டருக்கு 14 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 6 ரூபாயும் வாடகையா வசூலிக்கணும். ஆனா, இதை எந்த ஆட்டோக்காரரும்

மதிக்கிறதேயில்லை. ராத்திரி நேரத்துல வெறும் 25 சதவிகிதம் மட்டுமே வாடகையை உயர்த்தி வசூல் பண்ணணும்னு கவர்ன்மெண்ட் சொல்லியிருக்கு. ஆனா, கொஞ்சமும் கூசாம வாடகையை டபுள் பண்ணி வசூல் பண்றாங்க...''என்றார் கவலைபொங்க.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் (சி.ஐ.டி.யூ.) சுகுமாரனிடம் கேட்டபோது, ''ஆட்டோ வாடகை முறையில்லாம இருக்குறதுக்கு ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறைச் சொல்லக் கூடாது. தினமும் மூணு சவாரி கிடைக்கிறதே பெரிய பாடா இருக்குது. பெட்ரோல், டீசல் விலையும் ஏறிப்போச்சு. ஆட்டோ ஸ்பேர்பார்ட்ஸ் விலையும் எகிறிக் கிடக்குது. இதையெல்லாம் அனுசரிச்சுத்தான் ஆட்டோக்காரங்க வாடகையை வசூல் பண்ணிக்கிறாங்க. இதுமட்டுமில்லாம, மாநிலம் முழுக்க ஒரே மாதிரியான வாடகையை நிர்ணயம் பண்ணாதீங்க. அந்தந்த மாவட்ட சூழலுக்கு ஏத்த மாதிரி கட்டணத்தை நிர்ணயம் பண்ணிக்கச் சொல்லுங்கன்னு கவருமெண்டை நாங்களும் கேட்டுகிட்டே இருக்கோம். ஆனாலும், இதுல உருப்படியான முடிவு இன்னமும் உருவாகல. இவ்வளவு பிரச்னைகளையும் தாண்டி இன்னமும் பிரசவத்துக்கு இலவசமாகவும், அநாதைப் பிணங்களை தூக்கிட்டுப் போக இலவசமாகவும் ஆட்டோ ஓட்டி மனிதநேயத்தின் உச்சத்தை காட்டுறது ஆட்டோக்காரங்கதான்!'' என்றார்.

-- எஸ்.ஷக்தி
படங்கள் தி.விஜய்