காக்கிகளுக்கு கருணை காட்டுமா அரசு?

பதவியிறக்க ஆபத்து...

ஒருவருக்கு ஒளியேற்றும் ஒரு செயல், இன்னொருவ ருக்கு இருளைத் தரும் விஷ(ய)மாகும் விபரீதம் அபூர்வமாக நடப்பதுண்டு. அப்படி ஓர் அபூர்வ ஆபத்து தம்மைச் சூழ்ந்து விடுமோ என அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் சீனியாரிட்டி முறையில் எஸ்.ஐ-க்களாகியிருக்கும் போலீஸார்!

அண்மையில் தமிழ்நாடு காவல் துறைக்கு ஐந்நூ றுக்கும் மேற்பட்டவர்கள் நேரடி எஸ்.ஐ-க்களாக தேர்வு செய்யப்பட்டனர். பயிற்சி முடித்து இவர்கள் அனைவரும் கூடிய விரைவில்

பொறுப்புகளுக்கு வர விருக்கின்றனர். அப்படி அவர்கள் வந்துவிட்டால், சீனியாரிட்டி அடிப்படையில் எஸ்.ஐ-க்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், பழையபடி ஏட்டுகளாகி விடும் நிலை உருவாகியிருக்கிறது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய புரமோட்டட் எஸ்.ஐ-க்கள் சிலர், ''போலீஸ் டிபாட்மென்ட்ல போலீஸா சேர்ந்து... ஹெட் கான்ஸ்டபிள் லெவலை தாண்டு றதுக்கே பதினஞ்சு வருஷமாயிடுது. அதுக்கப்புறமும் சர்வீஸ்ல இருந்தோம்னா... எஸ்.ஐ-யாக வரலாம். முன்பெல்லாம் பதவி உயர்வு கொடுக்குறதுக்கு தேர்வு கமிட்டி இருந்துச்சு. அதுல முறைகேடுகள் நடக்குறதா புகார்கள் வந்ததால், ரெண்டு வருஷத்துக்கு முந்தி அந்த சிஸ்டத்தையே ரத்து செஞ்சுட்டாங்க. அதுக்கப்புறம் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பதவி உயர்வு குடுக்குறாங்க. அப்படித்தான் எங்களை மாதிரி சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டவங்களுக்கு ரெண்டு வருஷத் துக்கு முந்தி பதவி உயர்வு கிடைச்சுது.

இந்தநிலையில, இப்ப திடீர்னு ஐந்நூறுக்கும் மேற் பட்டவங்களை நேரடி எஸ்.ஐ-க்களாக எடுத்துருக்காங்க. இன்னும் ரெண்டு மாசத்துல அவங்களுக்கு போஸ்டிங் போடணும். ஆனா, அவங்களை எங்க போடப் போறாங்கன்னு தெரியலை. கடந்த ஆட்சியின்போது இப்படித்தான் நேரடியா எடுக்கப்பட்ட எஸ்.ஐ-க்களை போஸ்டிங் போடணும்கிறதுக்காக, புரமோஷன்ல வந்தவங்களை திரும்பவும் ஏட்டுகளாக பணி இறக்கம் செஞ்சுட்டாங்க. அது மாதிரி இப்பவும் நடக்குமோன்னு பயப்படுறோம். அதுக்காக புதுசா யாரையும் எஸ்.ஐ-க்களாக எடுக்கவேண்டாம்னு சொல்லலை. ஆனா, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதத்தில் பணியிடங்களை அதிகப்படுத்தணும்கிறது எங்க ளோட கோரிக்கை.

பிற துறைகளில் பணியாற் றுபவர்களாக இருந்தால், இந்நேரம் போராட்டம்... ஆர்ப்பாட்டம்னு செஞ்சு இந்த விஷயத்தில் அரசின் கவனத்தை ஈர்த்திருப்பாங்க.

எங்களுக்கு அந்த சுதந்திரம் இல்லாததால... எங்களின் கோரிக்கை அரசின் கவனத்துக்குப் போகாமல் இருக்கிறது. ஒருத்தரை ரெண்டு வருஷம் எஸ்.ஐ-யா வேலை பார்க்கச் சொல்லிட்டு, 'நீ மறுபடியும் ஏட் டாக வேலை பாரு'ன்னு சொன்னா, அவருடைய மன நிலை எப்படி இருக்கும்கிறதை காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் சிந்தித்துப் பார்க்கணும்...'' என்றனர்.

இவர்களின் அச்சம் குறித்து காவல் துறை ஏ.டி.ஜி.பி (நிர்வாகம்)-யான லத்திகாசரணிடம் கேட்டபோது, ''ரெக்ரூட்மென்ட் போர்டு மூலமா ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும் சீனியாரிட்டி முறையில ஒரு குறிப்பிட்ட சதவிகிதமும்தான் சப்-இன்ஸ்பெக்டர் செலக்ஷன்ஸ் இருக்கும். இந்த வரம்புக்குட்பட்டு பதவி உயர்வுக்கு வந்தவர்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால், சில நேரங்களில் அவசரத் தேவையை கருத்தில்கொண்டு எஸ்.ஐ-க்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், நடை முறைக்குத் தேவையில்லாத பட்சத்தில் பழைய கேடருக்குப் போயித்தான் ஆகணும். ஆனாலும், இப் போதைக்கு அது மாதிரியான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை. இதெல்லாம் தெரிஞ்சுதானே அவங்க புரமோஷன்ல வந்திருக்காங்க. அப்படி இருக்கையில திடீர்னு இவங்களுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்துருக் குன்னு புரியலை...'' என்றார்.

- எஸ்.சரவணப்பெருமாள்