குமுறும் குற்றப்பரம்பரை...

'குற்றவாளிகளாகப் பார்க்கலாமா?'

குற்றப் பரம்பரைச் சட்டம் ஒழிக்கப் பட்டாச்சு என்றே நாமெல்லாம் நினைத்திருக்க... மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட வில்லிவாக்கம் ராஜமங்களம் பகுதியில் இன்னும் குத்துக்கல்லாக அது உட்கார்ந்து வேறொரு ரூபத்தில் வதைக்கிறது!

தமிழ்நாட்டின் எந்த மூலையில் திருடுபோனாலும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால்... போலீஸார் முதலில் ஆஜராவது ராஜமங்களம் செட்டில்மென்ட்

பகுதிதானாம். 'ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஆணோ, பெண்ணோ கிடைத்தவர்களை அள்ளிப் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள்!' என்று புலம்பு கின்றனர் ஏரியாவாசிகள். அவர்களிடம் பேசி னோம்.

''நெல்லூர் ஜில்லா, கப்பராலதிப்பா என்ற ஊர்தான் எங்க பூர்வீகம். பழங்குடி இனத்தைச் சேர்ந்த எங்க முன்னோர்களுக்கிடையே அடிக்கடி சண்டை வந்து நிறையப் பேர் செத்துப் போயிருக் காங்க. இதைப் பார்த்த 'பவுடன் துரை'ங்கிற பிரிட்டிஷ்காரர், அந்த கிராமத்தையே இரும்புவேலி போட்டுக் கண் காணிச்சுருக்கார். இதை அடிமை வாழ்க்கையா நினைச்ச சில பேர் அங்கிருந்து தப்பிச்சு மெட்ராஸ் வந்து சால்ட் குவாட்டர்ஸில் சேர்ந்து கூலி வேலை பார்த்திருக்காங்க. ஒரு சமயம் ஊர்ல பஞ்சம் வந்தப்போ, சிலர் திருட்டுத் தொழில் பண்ணியிருக்காங்க. இதைக் கண்டுபுடிச்ச வெள்ளைக்காரன், 'இவங்கள்ளாம் கப்பராலதிப்பா குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவங் க'ன்னு எழுதிட்டுப் போயிட்டான். இன்னிக்கு நாங்க உழைச்சு முன்னேறி கௌரவமா வாழ்றோம். ஆனா, போலீஸ்காரங்க எங்களை குற்றப்பரம்பரைன்னு சொல்லி நிம்மதியா இருக்க விடமாட்டேங்கிறாங்க. நடு ராத்திரில வந்து ஆம்பளை, பொம்பளைன்னு வயசு வித்தியாசம் பாக்காம அடிச்சு இழுத்துட்டுப் போவாங்க. பத்தடி தள்ளிப்போனா...

ஒரு கிரவுண்டு மனை 80 லட்ச ரூபாய் போவுது. ஆனா, எங்களுக்கு மட்டும் குற்றப் பரம்பரை ஏரியான்னு சொல்லி '30 லட்சத்துக்கு மேல கிடையாது'ன்னு சொல்றாங்க. எல்லாருக்கும் வெள்ள நிவாரணம் கொடுத்த அரசாங்கம் எங்களை கைவிட்டுடுச்சு. கலர் டி.வி., காஸ் அடுப்பு எதுவுமே எங்களுக்குக் கிடையாது. போன முறை ஓட்டுக் கேட்டு வந்தப்போதான் எங்க எம்.எல்.ஏ-வையும், எம்.பி-யையும் பார்த்தோம்...'' என கொட்டித் தள்ளிவிட்டனர்.

வருண்குமார் என்ற இளைஞர் நம்மிடம், ''அப்போ நான் வைஷ்ணவா காலேஜில பி.ஏ. செகண்ட் இயர் படிச்சுட்டு இருந்தேன். 2007, ஆகஸ்ட் 18-ம் தேதி நடுராத்திரி வீட்டுக்கு வந்த கோயம்பேடு போலீஸார், என்னை இழுத்துட்டுப் போனாங்க. அடிச்சு உதைச்சு சட்ட விரோதமா ஆறு நாள் ஸ்டேஷன்ல வச்சுருந்தாங்க என்னை கோர்ட்ல ஒப்படைக்கச் சொல்லிஎங்க வீட்ல ஹேபியஸ் கார்பஸ் மனுபோட்டாங்க. இது தெரிஞ்சதும், பென்டிங்ல இருந்த ஒரு திருட்டு கேஸ்ல என்னை உள்ளே தள்ளிட்டாங்க. மறுநாள் பேப்பர்ல கொட்டை எழுத்துல என் போட்டோவோட நியூஸ் வந்துச்சு. ரொம்ப அவமானப்பட்டு காலேஜ் போறதையே நிறுத்திட்டேன். ஒரு வருஷம் கழிச்சு, 2008, ஏப்ரல் 9-ம் தேதி ராத்திரி விழுப்புரம் போலீஸ் வீட்டுக்கு வந்தது. கூட லோக்கல் போலீசும் இருந்தது. நான் திருடினதா சொல்லி என்னை ஜீப்புல ஏத்தினாங்க. தடுக்க வந்த எங்கம்மாவையும் அடிச்சு ஏத்தி விழுப்புரம் கொண்டுவந்துட் டாங்க. ரெண்டு நாள் கழிச்சு எங்களைத் தேடிக்கிட்டு எங்க ஆயாவும் ஸ்டேஷனுக்கு வந்துட்டாங்க. அவங்களுக்கு 80 வயசு. என்னை, எங்கம்மா ஜெயந்தி, ஆயா சரோஜம்மா மூணு பேரையும் அஞ்சு நாள் ஸ்டேஷன்லயே வச்சுருந்தாங்க. ஆளுக்கு ஒரு லட்சம் கொடுத்தா விட்டுர்றோம்னு சொன்னாங்க. பணத்துக்கு நாங்க எங்க போறது? மறு நாள், நான் பட்டப்பகலில் கத்தியைக் காட்டி ஒருத்தர்கிட்ட இருந்து 900 ரூபாய் பறிச்சதாகவும், எங்க ஆயாவும் அம்மாவும் ஒரு ஆள்கிட்ட 110 ரூபாய் ஜேப்படி பண்ணியதாகவும் சொல்லி ஜெயில்ல தள்ளிட்டாங்க. நாங்க இந்தப் பரம்பரையில பொறந்தது குத்தமா சார்?'' என கண்கலங்கினார்.

சுசீலம்மா என்பவர், ''என் பையன் பாஸ்கர் ஆட்டோ ஓட்டிகௌரவமா

சம்பாதிக்கிறான். ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்த திண்டிவனம் போலீஸ்காரங்க அவனை அடிச்சு இழுத்துட்டுப் போயிட்டாங்க. நாலு நாளா ஸ்டேஷன்லயே வச்சுருந்துட்டு இருபதாயிரம் கொடுத்தா விட்டுடறோம்னு சொன்னாங்க. காசில்லைன்னு அவன் பொண்டாட்டி அழுவுறதைப் பாத்துட்டு, 'காசில் லனா எவங்கூடயாவது போய்ட்டு வா. இல்லைன்னா, எங்ககூட வா'ன்னு அசிங்கமாப் பேசினாங்க. நான்நகையை அடமானம் வச்சு அஞ்சாயிரம் கொடுத்த பிறகு, கேஸே போடாம அவனை விட்டுட்டாங்க. இனிமே அப்பப்போ வருவோம்னு வேற மிரட்டியிருக்காங்க. என்ன ஆவுமோ...'' என்கிறார் கண்ணீருடன்.

இவர்களுக்காக சட்டரீதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் மனித உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் சாந்தகுமார்.

''குற்றப் பரம்பரை என்று என்றைக்கோ யாரோ முத்திரை குத்திவிட்டுப் போன காரணத்துக்காக, செய்யாத குற்றங்களுக்கெல்லாம் இம்மக்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஒரு சமூகத்தையே குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தியிருப்பது மனித உரிமைக்கு எதிரானது. போலீஸாருக்கு ஒத்துழைப்புத் தர இவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். 'இரவில் வரக்கூடாது, அரஸ்ட் வாரன்ட் வேண்டும், பெண்களை கைது செய்யும்போது... பெண் போலீஸார் இருக்கவேண்டும், பொய்க் குற்றம் சுமத்தக்கூடாது' என்பதே இவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. தற்போது பாதிக்கப்படவர்களின் பட்டியலைத் தொகுத்து, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி மனித உரிமைகள் ஆணையம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றை நாடவிருக்கிறோம். அதற்கு முன்பாக ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதிகள், இம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்விதமாக அரசாணை வெளியிட வேண்டும்!'' என்கிறார் சாந்தகுமார்.

இதுகுறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் கேட்டபோது, ''தவறு செய்யாத வர்கள் மீதெல்லாம் வழக்குப் போடுவதாகச் சொல்வது தவறு. சந்தேகத்தின் பேரில் சிலரை வெளியூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்திருக்கலாம். குற்றப் பரம்பரை என்ற காரணத்துக்காக அவர்களை ஒருபோதும் நாங்கள் துன்புறுத்துவதில்லை...'' என்றனர்.

மத்திய சென்னை எம்.பி-யான தயாநிதி மாறனின் தயவு தங்களுக்குக் கிடைக்குமா என காத்திருக்கிறார்கள் குற்ற விரல் காட்டப்படும் இந்தப் பரம்பரையினர்.

- எம்.பாலச்சந்திரன்
படங்கள் வீ. நாகமணி