Published:Updated:

தூத்துக்குடி: `கொலைத் திட்டத்தைத் தெரிந்துகொண்டான்’ - உடல் பாகங்களைத் தீயிட்டு, புதைத்த நண்பர்கள்

கைதுசெய்யப்பட்டவர்கள்

தூத்துக்குடியில் தொழில் போட்டியால் ஒருவரைக் கொலை செய்ய, திட்டமிடப்பட்டதைத் தெரிந்துகொண்ட நண்பரையே வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை தீயிட்டு எரித்து புதைத்த 4 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

தூத்துக்குடி: `கொலைத் திட்டத்தைத் தெரிந்துகொண்டான்’ - உடல் பாகங்களைத் தீயிட்டு, புதைத்த நண்பர்கள்

தூத்துக்குடியில் தொழில் போட்டியால் ஒருவரைக் கொலை செய்ய, திட்டமிடப்பட்டதைத் தெரிந்துகொண்ட நண்பரையே வெட்டிக் கொலை செய்து உடல் பாகங்களை தீயிட்டு எரித்து புதைத்த 4 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்டவர்கள்

தூத்துக்குடி, திரேஸ்புரம் அண்ணா காலனியை சேர்ந்த வாசகன் மகன் மதன்குமார். இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையைச் சேர்ந்த லயோ என்பவருடன் சேர்ந்து மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிச் சென்ற மதன்குமார் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், ஆலந்தலை அருகே மறவன்விளைக்கு செல்லும் காட்டுப்பகுதியில் மதன்குமார், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு புதைத்துவைக்கப்பட்டிருப்பதாக திருச்செந்தூர் தாலுகா போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸார், லயோவிடம் விசாரணை நடத்தினர்.

கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டிய லயோ
கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டிய லயோ

விசாரணையில், ஆலந்தலையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் தூத்துக்குடி ஜான்சனுக்கும் இடையே நிலவிய தொழில் போட்டியால், ராஜாவின் ஏற்பாட்டில் ஜான்சனைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால், ஜான்சனின் மைத்துனர் மதன்குமாருக்கு இந்தத் திட்டம் தெரியவந்ததால் லயோ அவரது நண்பர்கள் மூலம் மதன்குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து லயோ, ராஜா, மல்லையா என்ற முத்து மல்லையா, மரிய அந்தோணி, ஜாக்சன் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொலைச் சம்பவம் குறித்து போலீஸாரின் விசாரணையில், ``ஆலந்தலை ராஜாவும், தூத்துக்குடி ஜான்சனும் நண்பர்கள். ஜான்சனுக்கு சொந்த ஊர் ஆலந்தலைதான். கல்யாணத்துக்குப் பிறகு தூத்துக்குடி திரேஸ்புரத்தில் குடும்பத்துடன் வசிச்சிக்கிட்டு வர்றார். ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய தொழில் செய்துவந்தனர். இதுல இருவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிஞ்சுட்டாங்க. இலங்கையில இப்போ கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கு. அத்தியாவசியப் பொருள்களோட விலை பல மடங்கு உயர்ந்த மாதிரி, கடத்தல் பொருள்களோட விலையும் எகிறியிருக்கு. இதனால், தூத்துக்குடி கடலோரப் பகுதிகள்லயிருந்து இலங்கைக்குப் பொருள்களை கடத்திட்டுப் போகுறதுல கடுமையான போட்டி இருக்கு.

தோண்டப்பட்ட மதன்குமாரின் உடல்
தோண்டப்பட்ட மதன்குமாரின் உடல்

இந்த நிலையில, ராஜாவுக்கும் ஜான்சனுக்கும் தொழில்ரீதியா மோதல் ஆகிடுச்சு. இதனால, எங்க ஃபிரெண்ட் ராஜா, ஜான்சனைக் கொலை செய்யத் திட்டம் போட்டான். ஆனா, எங்களோட இந்தத் திட்டம் ஜான்சனோட மச்சான் மதன்குமாருக்கு எப்படியோ தெரிஞ்சுடுச்சு. ஆலந்தலையில் உள்ள லயோ வீட்டுக்குப் போயி தகராறு செஞ்சான் மதன்குமார். இதுல டென்ஷனான லயோ, மதன்குமாரைக் கொலை செய்யத் திட்டம் போட்டான். மதன்குமாரிடம் சமரசம் பேசுற மாதிரி, ஆலந்தலை அருகே மறவன்விளைக்குப் போகுற காட்டுப்பகுதியில நாங்க எல்லாரும் மது குடிச்சோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போ, ஜான்சன் கொலைத் திட்டத்தைப் பத்தி திரும்பவும் மதன்குமார் பேசினான். இதுல வாக்குவாதம் அதிகமாகிடுச்சு. அரிவாளால மதன்குமாரின் தலை, கை, காலை தனித்தனியா வெட்டி, பெட்ரோல் ஊத்தி எரிச்சோம். ஆனா, தீயில சரியா எரியாததுனால குழி தோண்டிப் புதைச்சுட்டோம்” எனக் கைது செய்யப்பட்டவர்கள் கூறி போலீஸாரையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட லயோவை ஆலந்தலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டிய லயோ
கொலை செய்த இடத்தை அடையாளம் காட்டிய லயோ

அங்கு, அவர் மதன்குமார் கொலைசெய்து புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினார். இதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் முன்னிலையில் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் மதன்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில், அவரது தலை மற்றம் கால்கள் தனித்தனியே வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜாக்சன் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகளும், மல்லையா மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட எட்டு வழக்குகளும், ராஜா மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism