Published:Updated:

ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, வீடியோக்கள்! -குட்கா ரெய்டுக்குச் சென்றபோது சிக்கிய கடைக்காரர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னையில் ஐந்து சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கூல்டிரிங்க்ஸ் கடைக்காரர் பெருமாளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் சிறுமி ஒருவரின் அம்மாவும், அவரின் சகோதரியும் சிக்கியிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் குளிர்பானக்கடை நடத்திவருபவர் பெருமாள் (வயது48). இவரின் கடையில் குட்கா விற்கப்படுவதாக டி.பி.சத்திரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் கடையைச் சோதனை செய்தனர். அப்போது 30 கிலோ குட்காவை போலீஸார் பறிமுதல் செய்ததோடு பெருமாளைக் கைதுசெய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, குட்கா சப்ளை குறித்த எந்தத் தகவலையும் பெருமாள் சொல்லவில்லை. அதனால் அவரின் செல்போனை வாங்கி போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது அதில் சில சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அது குறித்து பெருமாளிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பெருமாள்
பெருமாள்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் அம்மாவுக்கும் பெருமாளுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அதனால் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு பெருமாள் அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போது அவர் சிறுமியுடன் அன்பாகப் பழகியிருக்கிறார். அதன் பிறகு சிறுமிக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி, தன் தாயிடம் பெருமாள் குறித்துக் கூறியிருக்கிறார். ஆனால் சிறுமியின் அம்மா, எதையும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சிறுமியைப்போல இன்னும் நான்கு சிறுமிகளுக்கு பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. அதனால் பெருமாள், சிறுமியின் அம்மா, அவருக்கு உதவியாக இருந்த அவரின் சகோதரி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். பாலியல் தொல்லை கொடுத்த பெருமாள், அவ்வப்போது 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை செலவுக்குப் பணமும் கொடுத்திருக்கிறார்" என்றனர்.

`ஒரே நாளில் 3 வழக்குகள்'- சகோதரிக்குப் பாலியல் தொல்லை; சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்; பகீர் பின்னணி!
பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் டி.பி.சத்திரம் போலீஸார், இந்த வழக்கை உடனடியாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட பெருமாள், அவருடன் நட்பில் இருந்த சிறுமியின் அம்மா, சிறுமியின் அம்மாவுடைய சகோதரி ஆகியோரிடம் மகளிர் போலீஸார் தனித்தனியாக விசாரித்தனர். அப்போது சிறுமியின் அம்மாவுக்கு தெரிந்துதான் இந்த விஷயம் நடந்திருக்கிறது. சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் பெருமாள், பெண் குழந்தைகளுடன் எப்போதும் அன்பாகப் பேசி மிட்டாய்களைக் கொடுத்து பழகிவந்திருக்கிறார். அதன் பிறகுதான் தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காட்டிவந்திருக்கிறார். பெருமாள் கைதுசெய்யப்பட்ட தகவலைக் கேட்ட டி.பி.சத்திரம் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். தொடர்ந்து பெருமாளிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு