Published:Updated:

விழுப்புரம்: பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை; மேலும் 5 பேர் கைது!

போக்சோ
News
போக்சோ

11-ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று நபர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிறு கிராமத்தில் தன் பெரியம்மாவின் வீட்டில் வசித்து வரும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 மாதங்கள் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுதொடர்பான புகாரின் பேரில் மோகன் (32), மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (77), இளையராஜா (28) ஆகிய மூவரை நேற்று (09.01.2022) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தது செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ். இந்நிலையில், அந்த மாணவியை மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியது காவல்துறை. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், "இந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என நம்மிடம் பேசியிருந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைது செய்யப்பட்ட மூவர்
கைது செய்யப்பட்ட மூவர்

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் வெங்கடேசன்(25), பிரபு(37), பாபு(22), சத்யராஜ்(28), குப்பு(50)) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவியின் பெரியம்மா என கூறப்படும் குப்பு கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இதுபோன்ற பாலியல் வன்புணர்வு , பாலியல் கொடுமைகள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா

அதுமட்டுமின்றி, "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை 1098 மற்றும் 100 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். அப்படி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு... வீட்டிலோ, பணிபுரியும் இடத்திலோ அல்லது பொது இடங்களிலோ பாலியல் துன்புறுத்தல் இருந்தால் 181 என்ற இலவச எண்ணை அணுகலாம். இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு SOP காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்" என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கேட்டுக்கொண்டுள்ளார்.