Published:Updated:

சுகேஷுடன் தொடர்பு; மேலும் 5 பாலிவுட் நடிகைகளுக்கு சம்மன்?! -ரூ.200 கோடி பணம் பறிப்பு வழக்கில் அதிரடி

சுகேஷ் சந்திரசேகர்
News
சுகேஷ் சந்திரசேகர்

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையே மேலும் 5 பாலிவுட் நடிகைகளுக்கு அமலாக்கப் பிரிவு விரைவில் சம்மன் அனுப்பவிருக்கிறதாம்.

பிரபல மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை மிரட்டி ரூ. 200 கோடி பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், மிரட்டிப் பறித்த பணத்தை நடிகைகளுக்காகத் தண்ணீராகச் செலவு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கும் கோடிக்கணக்கில் பரிசுப்பொருள்களை சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது தெரியவந்தது.

நடிகைகளும் அதை ஒப்புக்கொண்டனர். அதிக அளவில் நடிகை ஜாக்குலினுக்குத்தான் சுகேஷ் செலவு செய்திருக்கிறார். தற்போது அந்தப் பொருள்களைப் பறிமுதல் செய்ய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் - சுகேஷ் சந்திரசேகர்

இந்த நிலையில் அடுத்தகட்டமாக சுகேஷ் சந்திரசேகருடன் மேலும் ஐந்து பாலிவுட் நடிகைகளுக்குத் தொடர்பு இருப்பதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஐந்து நடிகைகளும் சுகேஷ் சந்திரசேகரிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரிசுப்பொருள்களை வாங்கியிருக்கின்றனர். அவர்கள் ஐந்து பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். அவர்களிடம் சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்துத் தெரியுமா என்பது குறித்தும், என்ன காரணத்துக்காக சுகேஷிடம் பரிசுகளைப் பெற்றீர்கள் என்பது குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் சுகேஷிடம் பரிசு வாங்கிய நடிகைகள் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எந்நேரமும் அவர்களுக்குச் சம்மன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து நடிகைகள் பெயரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதோடு வேறு நடிகைகள், குறிப்பாக தென்னிந்திய நடிகைகள் யாருக்காவது சுகேஷுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.